இலங்கை கொள்வனவு முகாமையாளா் சுட்டெண் - 2018 மாச்சு

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2018 பெப்புருவரி 55.6 சுட்டெண் புள்ளிகளிலிருந்து மாச்சு மாதத்தில் 65.6 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்து 12 மாதத்திற்க்கான ஒரு உயர்வை அடைந்திருந்ததுடன் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஒரு உறுதியான முன்னேற்ற திருப்பத்தினை சமிஞ்சைப்படுத்தியதுடன் முன்னைய வருடங்களில் அவதானிக்கப்பட்ட போக்கிற்கு ஏற்ற விதத்திலும் காணப்பட்டது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில்  ஏற்பட்ட அதிகரிப்பிற்கு  புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச்சுட்டெண்களினால் பிரதிபலிக்கப்பட்டவாறு பருவகால கேள்விகளினூடாக அதிகரித்த கட்டளைகளே பெரிதளவில் பங்களித்திருந்தது. கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் மாதகாலப்பகுதியில் அதிகரித்திருந்தது. மேலும், நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண்ணும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சாதகமாக பங்களித்திருந்தது. எவ்வாறாகினும், அதிகளவிலான பதிலிறுப்பாளர்கள் திறன்சார் மற்றும் திறன்சார்பற்ற தொழிலாளர்கள் இரண்டிலுமான ஆட்சேர்ப்பில் காணப்படுகின்ற இடையூறுகளை, விசேடமாக புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையில் சுட்டிக்காட்டியிருந்தனர். ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை மாதகாலப்பகுதியில் பதிவு செய்து தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது. இதற்குமேலாக, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான ஒரு சாதகமான நிலைமையினையே குறித்துக்காட்டியது.

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2018 பெப்புருவரி 58.4 சுட்டெண் புள்ளியிலிருந்து மாச்சு மாதத்தில் 58.0 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது, பணிகள் துறையானது 2018 மாதகாலப்பகுதியில் பிரதானமாக புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் மெதுவான வீதத்தில் அதிகரித்திருந்தமையினை குறித்துக்காட்டுகின்றது. புதிய வியாபாரங்களில் விரிவாக்கமானது உறுதியாக நிலைத்திருந்ததுடன், இது நிதியியல் பணிகள் நடவடிக்கைகள், காப்புறுதி நடவடிக்கைகள் மற்றும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் அனைத்திலும் அவதானிக்கப்பட்டது. வியாபார நடவடிக்கைகளில் சாதாரணமாக பெப்புருவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மாச்சு மாதத்தில் பருவகால மேம்பாடொன்றினை அவதானிக்கக்கூடியதாக இருந்த போதிலும், இந்த முறை அளவீட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அபிவிருத்தியானது தங்குமிடம், உணவு மற்றும் குடிபான பணிகள், போக்குவரத்து மற்றும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் ஒரு குறைவே அவதானிக்கப்பட்டது. பதிலிறுப்பாளர்களும் 2018 மாச்சு மாத காலப்பகுதியில் நாட்டின் சில பிரதேசங்களில் காணப்பட்ட இன ரீதியான குழப்பநிலை அவர்களுடைய வியாபார நடவடிக்கைகளை பாதித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகளில் ஒரு அளவான விரிவாக்கமானது காணக்கூடியதாக இருந்த வேளையில், நிலுவையிலுள்ள பணிகள் 2018 மாச்சு மாத காலப்பகுதியில் அதிகரித்திருந்த தொழில்நிலை காரணமாக குறைவடைந்திருந்ததுடன், கடந்த மாத காலப்பகுதியில் காணப்பட்டிருந்த போக்கினையும் தொடர்ந்திருந்தது. எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் செலவு எதிர்பார்க்கப்படும் ஊதிய அதிகரிப்பு மற்றும் பண்டிகை காலத்தில் வழங்கப்படவிருக்கும் ஊக்குவிப்புகள் அதிகரித்திருந்ததுடன், பணிகள் துறையில் விதிக்கப்பட்ட விலைகள் ஒரு குறைவான வீதத்தில் அதிகரித்திருந்தது.

 

முழுவடிவம்

Published Date: 

Monday, April 16, 2018