சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி - நிபந்தனையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நோக்கமொன்றுக்காக வியாபாரத்தினை மீள ஆரம்பித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31(5)(அ)ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் கம்பனியின் எஞ்சியுள்ள வைப்புக்களின்; ஐம்பது சதவீத (50%) மீள்கொடுப்பனவு (மீள்கொடுப்பனவுத் திட்டம்) நோக்கத்திற்காக மாத்திரம் 2021 சனவரி 13ஆம் திகதியிலிருந்து தொடங்கி 2021 ஏப்பிறல் 12ஆம் திகதி வரையான மட்டுப்படுத்தப்பட்ட மூன்று (03) மாதங்களைக் கொண்ட காலப்பகுதியொன்றுக்காக பொது நலனுக்காகவும் கம்பனியின் வைப்பாளர்களின் நலன்களுக்காகவும் பல கட்டாய நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்தின் (முகாமைத்துவக் குழாம்) மேற்பார்வையின் கீழ் வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக  மற்றும் வரையறுக்கப்பட்ட காலமொன்றுக்காக வியாபாரத்தினை பெயரளவில் மீள ஆரம்பிப்பதற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியினை அனுமதிக்கின்ற கட்டளையொன்றினைப் பிறப்பித்துள்ளது.

இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபையினதும் சிரேஸ்ட முகாமைத்துவத்தினதும் இயலாமை என்பன காரணமாக நாணயச் சபையானது 2018 சனவரி 02 அன்று கம்பனியின் பணிப்பாளர்களுக்கு பணிப்புரைகளை விடுத்து கம்பனியின் விவகாரங்களைத் மேற்பார்வை செய்வதற்கு முகாமைத்துவக் குழாமொன்றினை நியமித்தது.

முழு வடிவம்

Published Date: 

Tuesday, January 12, 2021