நிதியியல் உளவறிதல் பிரிவின் மூலம் 2020 காலப்பகுதியில் நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கான தண்டங்களை விதித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவுடன் சேர்த்து  வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டமானது நிதியியல் நிறுவனத்தின் அல்லது பெயர் குறிக்கப்பட்ட நிதியல்லாத் தொழிலின் இணங்காமையின் தன்மை மற்றும் கடுமை என்பவற்றைப் பரிசீலனையில் கொண்டு குறித்துரைக்கப்படக்கூடியதாகும்.

அதற்கமைய, நாட்டில் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தலுக்கான ஒழுங்குமுறைப்படுத்துநராக நிதியியல் உளவறிதல் பிரிவானது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு நிதியியல் நிறுவனங்கள் மீது 2020.06.01 தொடக்கம் 2020.12.31 வரையான காலப்பகுதியில் மொத்தமாக ரூ.2.3 மில்லியன் தொகையுடைய தண்டங்களை விதித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நாட்டில் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தல் பற்றிய இணங்குவித்தலினை மேம்படுத்தும் பொருட்டு நிதியியல் உளவறிதல் பிரிவினால் நிதியியல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டங்களை வெளியிடுவதற்குத் தீர்மானித்தது.

அனுமதிப் பரிசோதனைகள் தொடர்பில் 2016ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதியியல் நிறுவனங்கள் (வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவனம்) விதிகளின் மீறுகைகள் மீது தண்டங்கள் முக்கியமாக விதிக்கப்பட்டிருந்தன.

2020.01.06 தொடக்கம் 2020.12.31 வரை நிதியியல் உளவறிதல் பிரிவினால் விதிக்கப்பட்ட தண்டங்களின் விபரங்கள் பின்வருமாறு:  

விதிக்கப்பட்ட திகதி

நிறுவனம் தொகை (ரூபா)
15.10.2020 றிச்சர்ட் பீரிஸ் பினான்ஸ் லிமிடெட் 300,000.00
04.11.2020 சொவ்ற்லொஜிக் பினான்ஸ் பிஎல்சி 1,000,000.00
25.11.2020 சியபத பினான்ஸ் பிஎல்சி 1,000,000.00

Published Date: 

Monday, January 11, 2021