இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தல்

நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணும் நோக்குடனும் கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான எதிர்மறையான தாக்கங்களைப் பரிசீலனையில் கொண்டும், இலங்கை மத்திய வங்கியினது நாணயச் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் கௌரவ நிதி அமைச்சர், 2020 யூலை 02ஆம் திகதியிடப்பட்ட 2182/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் செல்லுபடியாகும் காலத்தினை 2021 சனவரி 02 இலிருந்து மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்து 18.12.2020ஆம் திகதியிடப்பட்ட 2206/25ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் கட்டளையொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் மீதான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீதான பின்வரும் கட்டுப்பாடுகள் 2021 யூலை 01ஆம் திகதி வரை செயற்பாட்டிலிருக்கும்.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, January 5, 2021