ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆர்வலர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் தொடர்புடைய பணிகளை தடங்கலின்றி வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட ஒழுங்குகள்

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாபத் திணைக்களமானது, கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக நாட்டில் நிலவிவருகின்ற கஷ்டமான நிலைமைக்கு மத்தியிலும் அதன் பணிகளை இடைத்தடங்கலின்றி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பில் அதன் அனைத்து ஆர்வலர்களுக்கும் அறிவிக்கின்றது. மீளளிப்பு நிதியங்களைத் தீர்ப்பனவு செய்தல், பங்களிப்புச் சேகரித்தல், நிலுவை உறுதிப்படுத்தல்களை மற்றும் பங்களிப்பு வரலாற்று அறிக்கைகளை வழங்குதல் அத்துடன் பெயர் மற்றும் கணக்குத் திருத்தங்கள் போன்றன தொடர்புபட்ட பணிகள் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1.   மீளளிப்புக்களைத் தீர்ப்பனவு செய்தல்

நிர்ணயக் கடிதத்துடன் தொழில் ஆணையாளரிடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற அனைத்து மீளளிப்புக்கோரிக்கைகளும் ஏதேனும் தாமதமின்றிக் கொடுப்பனவு செய்யப்படும்.

2.   பங்களிப்புக்களைச் சேகரித்தலும், பங்களிப்பு விபரங்களும்

மாதாந்த ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்புக்களை சி படிவத்தில் தரப்பட்டுள்ள தொடர்புடைய தொடர்பு இலக்கத்தினைக் குறிப்பிடுவதன் மூலம் நாடு பூராகவுமுள்ள எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் செலுத்துவதற்கு தொழில்தருநருக்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலத்திரனியல் ரீதியாக பங்களிப்புக்களைச் செலுத்துவதற்கும் சி படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கும் ஏற்கனவே பதிவுசெய்துள்ள தொழில்தருநர்கள் அதே நடைமுறையினைத் தொடர்ந்தும் முன்னெடுக்கலாம் என்பதுடன் ஏனைய தொழில்தருநர்கள், ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணையமூடான பங்களிப்புக் கொடுப்பனவுகளுடன் பதிவுசெய்யுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்கு மேலதிகமாக, காசோலை ஊடாக பங்களிப்புக்களைக் கையளிக்கின்ற தொழில்தருநர்கள் காசோலைகளையும் தொடர்புடைய பங்களிப்பு விபரங்களையும் வைப்பிலிடுவதற்கு லொயிட்ஸ் கட்டடம், இல.13 சேர் போரன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள அஞ்சல் பெட்டியில் இடுவதற்கு அஞ்சல்பெட்டி வசதியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3.   பெயர் மற்றும் கணக்குத் திருத்தங்கள்

பெயர் மற்றும் கணக்குத் திருத்தங்கள் தொடர்பிலான அனைத்து ஆவணங்களையும் இல.13 சேர் போரன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு என்று முகவரியில் அமைந்துள்ள லொயிட்ஸ் கட்டடத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள அஞ்சல் பெட்டியில் வைப்பிலிடுமாறு அல்லது அருகிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அல்லது தபால் மூலம் அனுப்புமாறு அனைத்து அங்கத்தவர்களும் தொழில்தருநர்களும் கோரப்படுகின்றனர். திருத்தக் கோரிக்கைகள் பூர்த்தி அடைதலின் மீது ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களம் உறுப்பினர்களுக்கும் தொழில்தருநர்களுக்கும் பதிலனுப்பும்.

4.   நிலுவை உறுதிப்படுத்தல் மற்றும் பங்களிப்பு வரலாற்று அறிக்கைகள் வழங்குதல்

விசா விண்ணப்ப நோக்கங்களுக்கான நிலுவை உறுதிப்படுத்தல்களையும் பங்களிப்பு வரலாற்று அறிக்கைகளையும் அனைத்து வேண்டப்பட்ட ஆவணங்களுடனான பிரதிகளுடன் முறையான கோரிக்கையொன்றினை மின்னஞ்ல் ஊடாக அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

மேற்குறித்த ஒழுங்கேற்பாடுகள் பற்றி விபரங்களுக்கு www.epf.lk வெப்தளத்தினைப் பார்வையிடவும்.

Published Date: 

Thursday, October 29, 2020