சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதியின் கீழ் 2020 யூலை 13-23 காலப்பகுதியின் போது ரூ.11,829 மில்லியன் தொகையுடைய 3,985 புதிய கடன்களுக்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது

2020 யூலை 13-23 காலப்பகுதியின் போது சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி கட்டம் ஐஐ மற்றும் ஐஐஐஇன் கீழ் உரிமம்பெற்ற வங்கிகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ரூ.11,829 மில்லியன் தொகையுடைய 3,985 புதிய கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலே குறிப்பிடப்பட்ட புதிய ஒப்புதல்களின் மூலம் 2020 யூலை 23 வரை சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதியின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் இதுவரையிலும் ஒப்புதலளிக்கப்பட்ட கடன் விண்ணப்பங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26,291ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று, 2020 யூலை 23 வரை இலங்கை மத்திய வங்கியினால் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமதியும் ரூ.72,079 மில்லியனுக்கு அதிகரித்துள்ளது. 2020 யூலை 23 வரை கீழே அட்டவணை 1இல் காட்டப்பட்டவாறு தீவு முழுவதும் 18,007 கடன்பெறுநர்களுக்கு மத்தியில் ரூ.45,777 மில்லியன் தொகையினை உரிமம்பெற்ற வங்கிகள் ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன.

இலங்கை மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் கொவிட்-19 நோய்த்தொற்றின் மூலம் மோசமாகப் பாதிக்கப்பட்ட சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்கள் உள்ளடங்கலாக வியாபாரங்களுக்கென 6 மாதங்களைக் கொண்ட சலுகைக் காலப்பகுதியொன்று உள்ளடங்கலாக 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவுக் காலப்பகுதியுடன் ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வீதத்தில் தொழிற்படு மூலதனக் கடன்களாக மொத்தமாக ரூ.150 மில்லியன் தொகையினை வழங்குவதற்கு இவ்வசதியினை மூன்று கட்டங்களில் அறிமுகப்படுத்தியது. 

கடன் திட்டத்தின் கட்டம் ஐஇன் கீழ் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி மீள் நிதியளித்தல் வசதியினை வழங்குகின்றது. கடன் திட்டத்தின் கட்டம் ஐஐஇன் கீழ் நாணயச் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட பிணைய உறுதிகளுக்கெதிராக பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு 1 சதவீத வட்டி வீதத்தில் இலங்கை மத்திய வங்கி கடன்களை வழங்குகின்றது. கடன் திட்டத்தின் கட்டம் ஐஐஐஇன் கீழ் வியாபாரங்களுக்கு அத்துடன்ஃ அல்லது தனிப்பட்டவர்களுக்கு கடன்களை வழங்குவதற்கு பங்கேற்கும் நிதி நிறுவனங்கள் தமது சொந்த நிதியங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் அவ்வாறு வழங்கப்படும் கடன்கள் மீது 50 சதவீத - 80 சதவீத வீச்சில் கொடுகடன் உத்தரவாதத்தினை இலங்கை மத்திய வங்கி வழங்கி அவர்களது கொடுகடன் இடர்நேர்வு மற்றும் நிதியச் செலவுகளை சமாளிப்பதற்கு பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 5 சதவீத வட்டி உதவுதொகையினை வழங்குகின்றது.

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட தொழில்களும் தனிப்பட்டவர்களும் மேற்குறிப்பிடப்பட்ட கடன் திட்டங்களின் கீழ் தமது கடன் விண்ணப்பங்களை தொடர்புடைய வங்கிகளுக்கு 2020 ஓகத்து 31 வரை சமர்ப்பிக்கலாம்.

முழுவடிவம்

Published Date: 

Friday, July 24, 2020