இலங்கை மத்திய வங்கி கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் வசதிக்காக முடிவுத் திகதியை நீடிக்கின்றது

கொவிட் - 19 பரம்பலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி கடன் பிற்போடுதல் மற்றும் இரண்டு மாத தொழிற்படு மூலதனத்திற்காக 4 சதவீத வருடாந்த வட்டியுடைய மீள்நிதியிடல் வசதி போன்றவற்றிற்கான வேண்டுகோளைச் சமர்ப்பிக்கும் முடிவுத் திகதியினை 2020.04.30 இருந்து 2020.05.15 வரை நீடித்திருக்கின்றது. மேலும், ரூ.500,000 இற்கு உட்பட்ட பெறுமதியுடைய காசோலைகளின் செல்லுபடிக்காலம் காலாவதியாகியிருக்குமிடத்தில், 2020 மே 15 வரை அதனுடைய செல்லுபடியாகும் காலமாகக் கருத்திற்கொள்ள வேண்டுமென வங்கிகள் வேண்டிக்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான நீடிப்புக்கள் 2020.04.28ஆம் திகதியிடப்பட்ட 2020இன் 06ஆம் இலக்க சுற்றறிக்கையினூடாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

தகுதியான வியாபாரங்கள் மற்றும் தனிநபர்கள் இவ்வாறான நிவாரணகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் தேவையான தகவல்கள்/ ஆவணங்களுடன் தங்களுடைய வங்கிகளை முடிவுத்திகதிக்கு முன்னர் தொடர்புகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர். இந்நிவாரணங்களானது தகுதியுடைய கடன்களின் ஏற்கனவே இருக்கின்ற கடனுக்குரிய காலத்தினை கடனைப் பிற்போடக்கூடிய காலத்தினால் நீடித்துக்கொள்வதற்கு வங்கிகளை வேண்டிக்கொள்கின்றது. இவ்வண்ணம் நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் மேலதிகச் செலவுகள் ஏதுமில்லாமல் பிற்போடப்பட்ட கடனின் தவணைப் பணத்தினை மீளச்செலுத்துவதற்கு நாங்கள் கடன் பெறுநர்களை வற்புத்துகின்றோம், எனவே, இவ்வாறாகக் கிடைக்கப்படும் நிதியினால் வங்கிகளும் அவைகளின் திரவ நிலையை பலப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

Published Date: 

Friday, May 1, 2020