இலங்கை மத்திய வங்கியானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நாணயக் கொள்கையினை மேலும் இலகுபடுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 மாச்சு 16ஆம் திகதி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாடு தொடர்பாக நடைபெற்ற அவசரக்கூட்டத்தில், 2020 மாச்சு 17ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையூம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையூம் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.25 சதவீதத்திற்கும் 7.25 சதவீதத்திற்கும் குறைப்பதற்கும் தற்பொழுதுள்ள ஒதுக்கு பேணப்படுகின்ற காலப்பகுதியில் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் சார்ந்த வைப்புப் பொறுப்புக்களுக்குமான நியதி ஒதுக்கு விகிதத்தினை 1.00 சதவீதப் புள்ளியினால் 4.00 சதவீதத்திற்கும் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளது. உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய் பரவல் மற்றும் அதன் இலங்கை மீதான சாத்தியமான பரவலுடனும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அவசரமாக ஆதரவளிக்கும்; தேவைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு நாணயச் சபையானது இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது.

முழு வடிவம்

Published Date: 

Monday, March 16, 2020