வழிகாட்டல் 2020 - 2020 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

இன்று, இலங்கையின் பொருளாதாரம் முக்கியமானதொரு காலகட்டத்தில் காணப்படுகிறது. இறைமையுடைய நாடென்ற ரீதியில் தசாப்த காலங்களாக வகுக்கப்பட்ட கொள்கை வழிமுறைகள் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களையும் முன்னேற்றியிருக்கின்றன. இருப்பினும் கூட, கடுமையான சவால்களாக - சராசரிக்கும் குறைவான வளர்ச்சி, ஆங்காங்கே காணப்படும் விடாப்பிடியான வறுமை, உற்பத்தியாக்க மூலவளங்கள் குறைந்தளவில் பயன்படுத்தப்படுகின்றமை, ஏற்றுமதிகள் போதுமானளவில் விரிவடையாமை மற்றும் பன்முகப்படுத்தப்படாமை, படுகடனை உருவாக்காத மூலதன உட்பாய்ச்சல்களில் காணப்படும் பற்றாக்குறை, பாரிய கொடுகடன் மற்றும் வட்டி வீத சுழற்சி வட்டம் மற்றும் உயர் இறைப் பற்றாக்குறைகள் மற்றும் பொதுப்படுகடன் மட்டங்கள் என்பன தொடர்ந்தும் காணப்படுகின்றன. கொள்கை சார்ந்த அதேபோன்று கொள்கை சாராக் காரணிகளின் விளைவாக ஏற்பட்ட இச்சவால்களை தீர்க்கமான முறையில் கட்டுப்படுத்துவது பொருளாதாரம் உயர்ந்த மற்றும் உறுதியான வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேற்றமடைவதற்கு அவசியமானதாகும். அத்தகைய உயர்ந்த வளர்ச்சியின் பயன்களை சமூகம் முழுவதற்குமிடையே நியாயமான முறையில் பங்கீடு செய்வதும் அனைவருக்குமான வாய்ப்புக்களை உருவாக்குவதும் இன்றியமையாததாகும். இது வருமானங்களையும் வாய்ப்புக்களையும் சமத்துவமான முறையில் பங்கீடு செய்கின்ற மிகச் சுபீட்சமான நாடொன்றிற்கு வழிவகுக்கும். அத்தகைய பெறுபேறுகளை அடைவதற்கு நவீன சிந்தைகளுடன் கூடிய புத்தாக்கக் கொள்கைகள் அவசியமாகும்.

முழுவடிவம்

Published Date: 

Monday, January 6, 2020