லங்கா சி நியூஸில் வெளியிடப்பட்ட செய்திக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடமிருந்தான பதிலிறுத்தல்

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் தொடர்பான கொடுக்கல்வாங்கல்கள் பற்றி மாண்புமிகு விமல் வீரவன்ச பா.உ அவர்களினால் எனக்கு முகவரியிடப்பட்ட கடிதமென குறிப்பிடப்பட்டு லங்கா சி நியூஸ் வெப்தளத்தில் வெளியிடப்பட்ட 2019.02.17ஆம் திகதியிடப்பட்ட கட்டுரை பற்றி எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அத்தகைய கடிதமொன்றினை நான் இன்னமும் பெறாதபோதும் குறிப்பிட்ட வெப்தளம் தொடர்பில் பின்வரும் விடயங்களை பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

  1. இலங்கை மத்திய வங்கி ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மீது எடுக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பில் 2018.01.02 அன்று பத்திரிகை வெளியீடொன்றினை வெளியிட்டது. மேற்குறிப்பிட்ட வெப்தளத்தில் தெரிவிக்கப்பட்டவாறு 2018.02.01ஆம் திகதியன்றல்ல, மேலும் மேற்குறிப்பிட்ட பத்திரிகை வெளியீடு ஈரிஐ பினான்ஸின் அலுவல்களை மேற்பார்வை செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்கள் நியமிக்கப்பட்டமை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. உண்மையில், மத்திய வங்கியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற அலுவலர் தலைவராகவும் இரண்டு ஓய்வுபெற்ற வங்கியாளர்கள் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.
  2. மேற்குறிப்பிட்ட வெப்தளத்தில் குறிப்பிடப்பட்டவாறு, இலங்கை மத்திய வங்கி திரு. சுபாஸ்கரன் அல்லிராஜாவுடனோ அல்லது எவரேனும் தனிப்பட்டவர்களுடனோ உடன்படிக்கையெதனையும் செய்திருக்கவில்லை. சொத்துக்களை விற்பதற்கான அனைத்து கொடுக்கல்வாங்கல்களும்ஃ பேச்சுவார்த்தைகளும் ஈரிஐ பினான்ஸினாலேயே தொடர்பான தரப்பினருடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையினையே நாம் எப்பொழுதும் பேணிவருகின்றோம்.
  3. மேற்குறிப்பிட்ட வெப்தளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்ட கொடுக்கல்வாங்கல்களில் தலையிடவேயில்லை என்பதுடன், நாம் செய்ததெல்லாம் தேவையான ஒழுங்குமுறைப்படுத்தல் ஒப்புதல்களை வழங்கியதும் ஈரிஐ பினான்ஸின் பணிப்பாளர்களினால் செய்யப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் சொத்துக்களுக்கு சிறந்த சந்தை விலைகளைப் பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தமையும் மட்டுமே. இதன்படி ஈரிஐ பினான்சை ஆரம்பத்தில் சமர்ப்பித்த விலைக் குறிப்பீட்டிலும் பார்க்க உயர்ந்த விலையினைப் பெற்றுக்கொள்ளமுடிந்தது.
  4. எனினும், உள்நாட்டில் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமான பென் கோல்டிங் (பிறைவேட்) லிமிடெட்டினால் சுவர்ணமஹால் பினான்ஸ் சேர்விஸ் பிஎல்சியை புனரமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கு நிபந்தனையுடன்கூடிய ஒப்புதலை இலங்கை மத்திய வங்கி வழங்கியது. குறிப்பிட்ட ஒப்புதலுடன் சேர்த்து மத்திய வங்கி முதலீட்டாளரின் நிதியியல் பலம் உள்ளிட்ட தகவல்களை கோரியிருந்தது. இது மத்திய வங்கிக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. மேற்குறிப்பிட்ட வெப்தளத்தில் குறிப்பிடப்பட்டவாறு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸ்ஸிற்கு ஐ.அ.டொலர் 12 மில்லியன்களை உள்ளீடு செய்தவற்கான உடன்படிக்கை எதுவும் இருக்கவில்லை.
  5. 2018.01.02ஆம் திகதியிடப்பட்ட எமது பத்திரிகை வெளியீட்டில் மிகத் தெளிவாக குறிப்பிட்டவாறு ஈரிஐ பினான்ஸின் பணிப்பாளர் சபை தொடர்ந்தும் இயங்கும் என்பதுடன் முதலீட்டாளர்களுடனும் வைப்பாளர்களுடனும் அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும் நடத்துமாறு பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கமைய, ஈரிஐ பினான்ஸ் பணிப்பாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கி இதனை தெரியப்படுத்திய நிலையிலும் கம்பனியின் அலுவல்கள் தொடர்பில் அவர்களின் ஈடுபாட்டில் எவ்வித மாற்றங்களும் காணப்படவில்லை.
  6. ஈஏபி நிறுவனத்தின் விற்பனைக்கு இலங்கை மத்திய வங்கி அதன் 2018.02.27ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலமோ அல்லது வேறுஏதேனும் ஒப்புதலூடாகவோ ஒப்புதலெதனையும் வழங்கவில்லை. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை ஈரிஐ பினான்ஸின் ஐ.அ.டொலர் 75 மில்லியன் மொத்த பெறுமதியினைக் கொண்ட குறிப்பிட்ட சொத்துக்களை விற்பனை செய்வதற்கு மட்டுமே ஒப்புதலளித்தது. ஆரம்ப ஒப்புதல் அனைத்து அடையாளம் காணப்பட்ட சொத்துக்களையும் ஒரே தடவையில் மாற்றல் செய்வதாகவிருந்த போதும், வாங்குநர்கள் தொகைகளை தொகுதி தொகுதியாக செலுத்தியமையினால் ஒவ்வொரு தொகுதியும் பெறப்பட்டதும் அதற்குச் சமமான சொத்துக்கள் மாற்றல் செய்யப்பட்டன.
  7. ஐ.அ.டொலர் 54 மில்லியனை அனுப்பியதன் பின்னர் மீதி ஐ.அ.டொலர் 16 மில்லியனை அனுப்புவதற்கு மத்திய வங்கி ஓராண்டு காலத்தினை வழங்கும் செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கவில்லை என்பதுடன், எந்தவொரு நேரத்திலும் அவ்வாறு செய்யப்படவும் மாட்டது. உண்மையில் நடந்தது என்னவெனில், வாங்குநர் 2018.10.25 அன்று ஐ.அ.டொலர் 16 மில்லியனை உள்நாட்டு வங்கியொன்றிற்கு அனுப்பியிருந்தார். எனினும், தவறான புரிந்துணர்வின் காரணமாக அதனை பின்னர் மீளப்பெற்றுக் கொண்டுவிட்டார். எனினும், இத்தொகை 2019 பெப்புருவரி இறுதிக்கு முன்னதாக அனுப்பப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  8. வாங்குநரினால் கையேற்கப்பட்ட நிறுவனங்களைப் பதிவுசெய்தலானது அத்தகைய நிறுவனத்தினைப் பதிவுசெய்வதற்கு ஏற்புடைத்தான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இது சொத்துக்களை கையேற்றதரப்பினரால் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
  9. நிதிகளை அனுப்பும்பொழுது அனுப்புகின்ற தொடர்பான வங்கிகள் அதிகளவு நுணுக்கமான கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்ட நுணுக்கமான கவனிப்பில் அவர்கள் திருப்தியடைந்தால் மட்டுமே நிதியினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவற்றிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வங்கிகள் அதற்கிணங்க செயற்பட்டதனையும் நிதிகள் தொடர்பான கணக்குகளை வரவு வைப்பதனையும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
  10. கொடுக்கல்வாங்கல் தொடர்பில் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது, தரப்பினர் கொள்வனவு செய்த சொத்துக்கள் சட்டத்திற்கு மாறான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்பது தொடர்பில் எமக்கு எவ்வித அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை.
  11. கொடுக்கல்வாங்கல்களுக்காக இணங்கப்பட்ட ஐ.அ.டொலர் 75 மில்லியன் முழுத்தொகையும் பெற்றுக்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் (தற்போதைய கலந்துரையாடல்களின்படி ஐ.அ.டொலர் 70 மில்லியன் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்) மீதி ஐ.அ.டொலர் 5 மில்லியனுக்குப் பதிலாக சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விஸ் பிஎல்சி ஈரிஐ பினான்ஸின் வசமே இருக்கும். எதுஎப்படியெனினும், சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விஸ் பிஎல்சிற்கான மாற்று வழிமுறைகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. 
  12. நிதியியல் நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான இலங்கை மத்திய வங்கியின் சட்ட ரீதியான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவுள்ளன. இது தொடர்பில் காணிகளையும் ஊடக நிறுவனங்களையும் பதிவுசெய்வது தொடர்பான அதிகாரம் தொடர்பான அதிகாரசபைகளிடமேயுள்ளன. எனவே, இலங்கை மத்திய வங்கி ஒப்புதல்களை வழங்கும்போதும் மற்றைய நேரங்களிலும் கொள்வனவை மேற்கொள்கின்ற மற்றும் சொத்துக்களை மாற்றல் செய்கின்ற அனைத்து தரப்பினரும் ஏற்புடைத்தான சட்டங்களுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் உட்பட்டு நடந்துகொள்ள வேண்டுமென மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகின்றது.
  13. இலங்கை மத்திய வங்கி சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விஸ் வியாபாரத் திட்டத்திற்கு ஒப்புதலளிப்பது தொடர்பில் சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விஸ்சுடன் மட்டுமே தொடர்புகளை மேற்கொண்டு வருவதுடன் மேற்குறிப்பிட்ட வெப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டது போல் வேறு தரப்பினருடன் எத்தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை.
  14. முன்னர் நாம் தெரிவித்தவாறு, ஈரிஐ பினான்ஸ் அதன் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு நாம் ஒப்புதலை வழங்கிய நேரத்தில் வேறு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் எந்தவொரு முன்மொழிவும் இலங்கை மத்திய வங்கிக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

Published Date: 

Wednesday, February 20, 2019