புதிய உதவி ஆளுநர்களின் நியமனம்

நாணயச் சபை, 2016 ஏப்பிறல் 05ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் செல்வி கே சரவணமுத்து மற்றும் திரு ஈ ஏ எட்டியாராச்சி, திரு ஆர் ஏ ஏ ஜெயலத்; திரு கே எம் எம் சிறிவர்த்தன மற்றும் திரு எஸ் ஜே ஏ கந்தகம ஆகிய ஐந்து உயர் அலுவலர் வகுப்பு தரம் ஐஏ அலுவலர்களை முறையே 2016 ஏப்பிறல் 05, 2016 ஏப்பிறல் 16, 2016 யூன் 12 மற்றும் 2016 யூன் 18ஆம் திகதிகளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் உதவி ஆளுநர்களாகப் பதவி உயர்த்தியிருக்கிறது. இப் பதவி உயர்வுகள் வங்கியின் தொடர்ச்சியான திட்டத்திற்கு அமைவாகவும் மத்திய வங்கியின் புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து அவற்றைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

செல்வி கே சரவணமுத்து

முன்னாள் கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்பு திணைக்களப் பணிப்பாளரான இவர் நிதியியல் துறை ஆராய்ச்சி திணைக்களம் மற்றும் பிரதேச அபிவிருத்தி திணைக்களம் என்பனவற்றுக்குப் பொறுப்பான உதவி ஆளுநராக இருப்பார்.   

மத்திய வங்கியில் 34 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய செல்லி சரவணமுத்து பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம், கிராமியக் கொடுகடன், செயலகம், வங்கி மேற்பார்வை, நிதியியல் சந்தை, பொதுப்படுகடன், தொடர்பூட்டல், நிதியியல் முறைமை உறுதிப்பாடு, புள்ளிவிபரவியல் மற்றும் கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்பு ஆகிய திணைக்களங்களில் பணியாற்றியிருக்கின்றார். அவர் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை குழு மற்றும் நிதியியல் உறுதிப்பாட்டுக் குழு என்பனவற்றின் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்.  

நிதி அமைச்சிற்கு விடுவிக்கப்பட்டிருந்த இவர், பொருளாதார அலுவல்களின் பணிப்பாளராகவும் வெளிநாட்டு மூலவளங்கள் திணைக்களம் மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களம் என்பனவற்றின் துணைப் பணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.  

மத்திய வங்கியில், செல்வி சரவணமுத்து நுண்பாக நிதி மசோதாவினைத் தயாரிப்பதில் நெருங்கிச் செயற்பட்டிருக்கின்றார். மேலும் மத்திய வங்கியின் பல உபாயத் திட்டமிடல்களைத் தயாரிப்பதற்கும் பொறுப்பாக இருந்திருக்கின்றார். இவர் வங்கிகளின் அழுத்தப்பரீட்சிப்பு மற்றும் பல நிதியியல் ஆற்றல் குறிகாட்டிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் பேரண்ட முன்மதியுடைய பாகுப்பாய்வுகள் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியிருக்கின்றார்.  

செல்வி சரவணமுத்து முதனிலை வணிகர்களின் மேற்பார்வைக்காக ஒழுங்கு முறைப்படுத்தல் முறையொன்றினை உருவாக்கியிருந்ததுடன் இலங்கை அபிவிருத்தி முறிகளை அறிமுகப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார். அவர் இலங்கையின் முதலாவது கொடுகடன் தரமிடல் முகவரை நிறுவுவதுடன் தொடர்பான வேலைகளையும் கையாண்டார்.  

செல்வி சரவணமுத்து, பொருளாதாரத்தில் முதுகலைமானிப் பட்டத்தினை ஐக்கிய இராய்ச்சியத்தில் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்தும் பொருளாதாரத்தில் விஞ்ஞானமானிப் பட்டத்தினை இலன்டன் பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றவராவார்.   

திரு ஈ எட்டியாராச்சி  

வசதிகள் முகாமைத்துவத்தின் முன்னாள் பணிப்பாளரும் பாதுகாப்பு திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான இவர் அலுவலர் பணிகள் முகாமைத்துவ திணைக்களம் மற்றும் வசதிகள் முகாமைத்துவ திணைக்களம் என்பனவற்றிற்கப் பொறுப்பான உதவி ஆளுநராக இருப்பார்.  

திரு ஈ ஏ எட்டியாராச்சி இலங்கை மத்திய வங்கியில் வேறுபட்ட இயலாற்றல்களில் 34 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தினைக் கொண்டவர். அவர் தகவல் தொழில்நுட்பம், நிதி, செலாவணிக் கடடு;ப்பாடு, பிரதேச அபிவிருத்தி, புள்ளிவிபரம் மற்றும் அலுவலர் பணிகள் முகாமைத்துவம் ஆகிய திணைக்களங்களின் தலைவராக பணியாற்றியிருக்கின்றார். திரு எட்டியாராச்சி சௌபாக்கியா மற்றும் தேசிய வேளாண் வியாபார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் உள்பட வேளாண்மை, வறுமை ஒழிப்பு மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சித் துறைத்திட்டங்கள் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதிலும், கொடுகடன் மற்றும் நிதியியல் அறிவாற்றலை அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களினூடாக பிரதேச ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்துவதிலும் அளப்பரிய பங்களிப்புக்களை வழங்கியிருக்கின்றார். அவர், முறைசார்ந்த வங்கித்தொழிலினூடாக தொழிலாளர் பணவனுப்பல்களை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களையும் வடிவமைத்திருக்கின்றார். தகவல் தொழில்நுட்பத்தில் அவருக்கிருந்த அனுபவத்தின் காரணமாக அவர் இலங்கையின் முதலாவது தரவுத்தளத்தினை அபிவிருத்தி செய்ததுடன் வங்கித் தொழில் துறை Y2K இணங்குவிப்புக்களை உறுதிப்படுத்துவதில் வங்கிகள் மற்றும் வெளிவாரி கணக்காய்வாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். இவர் அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைமை/ பத்திரங்களற்ற பிணையங்கள் முறைமை/ பொதுப்பேரேடு என்பனவற்றின் வடிவமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் குழுவின் முன்னாள் உறுப்பினருமாவார். 

திரு. எட்டியாராச்சி வியாபார நிருவகத்தில் முதுமானிப் பட்டத்தினையும் இளம் விஞ்ஞானமானிப் பட்டத்தினையும் சிறிஜெயவர்தத்னபுர பல்கலைக்கழத்திலிருந்து பெற்றவராவார்.

திரு. ஆர். ஏ. ஏ. ஜெயலத்  

முன்னாள் ஊழியர் சேம நிதியத் திணைக்களத்தின் கண்காணிப்பாளரான இவர் வங்கி மேற்பார்வை, வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஊழியர் சேம நிதியம் என்பனவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநராக இருக்கின்றார்.  

திரு. ஆர். ஏ. ஏ. ஜெயலத் உள்ளகக் கணக்காய்வு, வங்கித்தொழில் அபிவிருத்தி, பொருளாதார ஆராய்ச்சி, வங்கி மேற்பார்வை, செயலகம், பன்னாட்டுத் தொழிற்பாடுகள், உள்நாடடு;த் தொழிற்பாடுள் மற்றும் ஊழியர் சேம நிதியம் ஆகிய திணைக்களங்களில் 26 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றார்.   

திரு. ஜெயலத், வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவம், திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பனவற்றிறகு;ப் பல்வேறு மேம்பாடுகளையும் வளர்ந்துவரும் பொருளாதார நிலைமைகளுக்கு பொருந்தக்கூடிய ஒதுக்குப் பேணல் கட்டமைப்பினையும் அறிமுகப்படுத்துவதற்குக் காரணமாக இருந்ததுடன் ஊ.சே. நிதியத் தொழிற்பாடுகளை பிரதேச மட்டங்களுக்கு விரிவடையச்செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொணடி;ருந்தார்.  

பல்வேறு பயிற்சி அமைப்புக்கள், தொழில் நிபுணத்துவம் சார்ந்த சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களினால் நடத்தப்பட்ட பல்வேறு கல்வியியல்/ பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களிலும் நிதி, கணக்கீடு, கணக்காய்வு, பொருளாதார திறைசேரி முகாமைத்துவம் மற்றும் நிதியியல் சாதனங்கள் ஆகிய துறைகளில் ஒரு பயிற்றுவிப்பாளராகவும் வெளிவாரி வள ஆளணியினராகவும் இருந்திருக்கின்றார்.  

திரு. ஜெயலத் இலங்கையின் செலவு முகாமைத்துவக் கணக்காளர் ஆளுகைச் சபை, இலங்கை பட்டயக் கணக்காளர் தர உறுதிப்பாட்டுச் சபை என்பனவற்றின் உறுப்பினராகவும் இலங்கை மத்திய வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றைய பல்வேறு சபைகளிலும் குழுக்களிலும் பல பதவிகளையும் வகித்து வருகிறார். அவர். ஊ.சே. நிதிய முதலீடு, நாணயக் கொள்கை, நிதியியல் துறை உறுதிப்பாடு, இடர்நேர்வு முகாமைத்துவம், வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவம், நாட்டிற்கான முறி வழங்கல் போன்ற குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றுகின்றார்.  

இவர் ஐக்கிய அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் முதுகலைமானிப் பட்டத்தினையும் சிறிஜெயவர்தத் னபுர பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பு நிறுவகத்திலிருந்து வியாபார நிருவாகத்தில் முதுகலைமானிப் பட்டத்தினையும; களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து வர்த்தகத்தில் இளமானிப் பட்டத்தினையும; பெற்றவர். இவர் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினருமாவார். 

திரு. கே. எம். எம். சிறிவர்த்தன

முதன்மைப் பொருளியலாளரும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களப் பணிப்பாளருமான இவர் 2016 யூன் 12 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் உதவி ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.  

திரு. சிறிவர்த்தன, இலங்கை மத்திய வங்கியில், குறிப்பாக, பொருளாதார ஆராய்ச்சி, அரச நிதி மற்றும் பொதுப்படுகடன் துறைகளில் 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார்.  

இவர் 2010 ஒத்தோபரிலிருந்து 2015 ஏப்பிறல் வரை நிதி அமைச்சிற்கு விடுவிக்கப்பட்டிருந்தார். இக்காலப்பகுதியில் இவர் நிதி அமைச்சில் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் இறைக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகித்திருக்கிறார். அக்காலப்பகுதியில் அவர் இறைக் கொள்கை அதேபோன்று பொதுவான பேரண்ட இறை முகாமைத்துவம் என்பனவற்றுடன் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார்.  

திரு. சிறிவர்த்தன இலங்கை வங்கி, வர்தத்க வங்கி பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை ஏற்றுமதிக் கொடுகடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை என்பனவற்றை உள்ளடக்கிய பல்வேறு நிறுவனங்களினதும் பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் திறைசேரியினைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் பணியாற்றியிருக்கின்றார்.  

இவர் பொருளாதாரத்தில் முதுகலைமானிப் பட்டத்தினையும் பொருளாதார அபிவிருத்தியில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் ஐக்கிய அமெரிக்காவின் வண்டபில்ற் பல்கலைக்கழகத்திலிருந்தும் பொருளாதாரத்தில் இளம் கலைமானிப் பட்டத்தினை களனிப் பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார்.  

திரு. சிறிவர்த்தன இறைக் கொள்கை, பொதுப்படுகடன் மற்றும் முதலீட்டுத் துறைகளில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளுக்கும் சொந்தக்காரராவர்.   

திரு. அசோக் கந்தகம  

பிரதேச அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளரான இவர் 2016 யூன் 18ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் உதவி ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.  

மத்திய வங்கியில் 26 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் திரு. கந்தகம புள்ளிவிபரவியல், வங்கித்தொழில் அபிவிருத்தி, செயலகம், தொடர்பூட்டல், பயிற்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி ஆகிய திணைக்களங்களில் பணிபுரிந்திருக்கின்றார். மத்திய வங்கியில் அவர் ஆற்றிய 26 ஆண்டு காலப் பணியில் திரு. கந்தகம தொடர்பூட்டல் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் பரந்தளவு அனுபவங்களைப் பெற்றிருக்கின்றார். இலங்கை மத்திய வங்கியின் தொடர்பூட்டல் உபாயத்தினை மீள்நடவடிக்கையிலிருந்து முன்கூட்டிய நடவடிக்கைக்கு மாற்றியமைப்பதில் அளப்பரிய பணிகளை ஆற்றியிருப்பதுடன் புதிய தொடர்பூட்டல் சாதனங்களையும் பொதுமக்களுடனான தொடர்பூட்டல்களைக் காத்திரமான முறையில் மேற்கொள்வதற்காக செவிப்புல மற்றும் கட்புலப் பொருட்களை அபிவிருத்தி செய்வதிலும் வங்கிக்கான கம்பனி வடிவமைப்பினை அறிமுகப்படுத்துவதிலும் மில்லியன் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் வெப்தளத்தினை புதுக்கி அமைப்பதிலும் பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார். கலைநயம் மிக்க வேலைப்பாடுகளையும ;இலங்கை மத்திய வங்கியின் அரும்பொருட்காட்சிச்சாலையிலுள்ள நாணயங்களையும் பயன்படுத்தி இலங்கை பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலையின் முதற் கடட் த்தினை உருவாக்கி வடிவமைத்து நிறுவுவதற்கும் இலங்கை மத்திய வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் விதத்தில் 'திரும்பிப்பார்க்கும்" நூலினை வெளியிடுவதற்கான அவரின் பங்களிப்பு அளப்பரியது. திரு. கந்தகம வங்கியின் சார்பில் பல்வேறு கருப்பொருட்களில் பல்வேறு கல்வியியல் ஆவணப் படங்களை நெறிப்படுத்தியிருப்பதுடன் இவற்றிறக் hக அவருக்கு 2002இல் மிகச் சிறந்த பணிக்கான விருதும் வழங்கப்பட்டது.  

திரு. கந்தகம தேசிய சிறிய நடுத்தர தொழில்முயற்சிகள் கொள்கைக் கட்டமைப்பின் பணிக் குழுவில் தீவிரமானதொரு உறுப்பினராக பணியாற்றிருக்கின்றார். இவர் சனாதிபதி செயலகத்தின் கீழ், தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பின் உறுப்பினராகவும் பிரதம மந்திரியின் அலுவலகத்தின் கீழ் பொருளாதார அலுவல்கள் மீதான துணைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்து இலங்கை மத்திய வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், திரு. கந்தகம மிகச் சிறந்த படத் தயாரிப்பாளராகவும் விமர்சகராகவும் எழுத்தாளராகவும் விளங்கியதுடன் பன்னாட்டு விருதுகளையும் வென்றவராவார்.  

இவர் விஞ்ஞானத்தில் முதுமானிப் பட்டத்தினையும் கணியம்சார் அபிவிருத்திப் பொருளாதாரத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் ஐக்கிய இராச்சியத்தின் வோறிக் பல்கலைக்கழகத்திலிருந்தும் கணிதத்தில் இள விஞ்ஞானமானிப் பட்டத்தினை களனிப் பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றவராவர்.  

 

Published Date: 

Wednesday, May 4, 2016