நாணயச் சபையின் உறுப்பினராக திரு நிஹால் பொன்சேகா நியமனம்

திரு. அந்தோனி நிஹால் பொன்சேகா, நாணய விதிச் சட்டத்தின் பிரிவு 8(2) (இ) இன் நியதிகளுக்கிணங்க 2016 யூலை 27ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினரொருவராக மேதகு சனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

நீண்ட அனுபவம் மிக்க வங்கியாளரான திரு. பொன்சேகா இலங்கையிலும் அதேபோன்று வெளிநாடுகளிலும் பல முக்கிய முகாமைத்துவப் பதவிகளை வகித்தவர். அவர் டிஎவ்சிசி வங்கியின் முதன்மை நிறைவேற்று அலுவலராக 13 ஆண்டுகளுக்கு மேலாகவும் எச்எஸ்பிசி வங்கி கொழும்பின் துணை முதன்மை நிறைவேற்று அலுவலராக 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் பதவி வகித்தவர். அவர் கொழும்பு பங்குச் சந்தை, லங்கா வென்ஜாஸ் பிஎல்சி, ஈகுயிட்டி பாட்னர்ஸ் பிறைவேட் லிமிடெட், லங்கா இன்டஸ்றியல் எஸ்டேட் லிமிடெட், நசனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் அதேபோன்று மணிலாவிலுள்ள ஆசியா மற்றும் பசுபிக் அசோசியேசன் ஒப் டெவலப்மன்ட் பினான்சிங் இன்ஸ்சிரியூட்டின் தலைவராகவும் பதவி வகித்தவர். அவர் கொமர்சல் பாங் ஒப் சிலோன் பிஎல்சி, ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை, டிஎவ்சிசி வர்த்தன வங்கி பிஎல்சி, தேசிய கொள்வனவு ஆணைக்குழு, வரி விதிப்பு மீதான கலாநிதி ஆணைக்குழு மற்றும் வரையறுக்கப்பட்ட கொடுகடன் தகவல் பணியகம் போன்ற அனேக அரச மற்றும் தனியார் கம்பனிகளில் பணிப்பாளர் பதவிகளையும் வகித்திருக்கின்றார். தற்பொழுது திரு. பொன்சேகா ஜோன் கீல்ஸ் கோல்டிங் பிஎல்சியின் குழும கணக்காய்வுக் குழுவின் பணிப்பாளர் மற்றும் தலைவராகவும் பிரான்டிக்ஸ் லங்கா லிமிடெட்டில் குழும கணக்காய்வுக் குழுவின் தலைவராகவும், சார்டட் இன்ஸ்டியூட் ஒப் செக்குறிட்டீஸ் அன்ட் இன்வெஸ்மன்டின் இலங்கை தேசிய சபையின் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்க - இலங்கை வுல்பிறைட் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். 

திரு. பொன்சேகா விஞ்ஞான மாணிப்பட்டத்தினை இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பிலிருந்து பெற்றுக்கொண்டார். அவர் ஐக்கிய இராச்சியத்தின் வங்கியாளர் பட்டய நிறுவகத்தினது மூத்த உறுப்பினராகவும் ஐக்கிய இராச்சியத்தின் பிணையஙக் ள் மற்றும் முதலீட்டு பட்டய நிறுவகத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார். 

அனேக கட்டுரைகளின் ஆசிரியரான இவர் உள்நாட்டிலும் பன்னாட்டிலும் இடம்பெற்ற பல்வேறுபட்ட அரங்குகளில் பெரும் எண்ணிக்கையான காட்சிப்படுத்தலுடன் கூடிய விளக்கவுரைகளையும் ஆற்றியிருக்கின்றார்.  

Published Date: 

Thursday, August 4, 2016