இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2025 திசெம்பர்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 திசெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 திசெம்பரில் 60.9 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் விரிவடைதலொன்றை எடுத்துக்காட்டியது. மாதத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட மோசமான வானிலையுடன் தொடர்புடைய இடையூறுகளுக்கு மத்தியில், பிரதானமாக பருவகால கேள்வியினால் துணையளிக்கப்பட்டு, இவ் அதிகரிப்பு அனைத்து துணைச் சுட்டெண்களுக்கும் சாதகமாக பங்களித்திருந்தது.

பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பணிகள் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க விரிவடைதலொன்றை எடுத்துக்காட்டி, 2025 திசெம்பரில் 67.9 சுட்டெண் பெறுமதியொன்றைப் பதிவுசெய்தது.

முழுவடிவம்

 

Published Date: 

Friday, January 16, 2026