மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (மா.மொ.உ.உ) - 2024

நாட்டின் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் மேல் மாகாணம் பாரியளவிலான பங்களிப்பினைத் தொடர்ந்தும் தக்கவைத்திருக்கின்ற வேளையில் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் முக்கிய பங்களிப்பாளர்களாகத் தொடர்ந்தும் திகழ்கின்றன

நாட்டின் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் மேல் மாகாணம் முக்கிய பங்களிப்பாளராகத் தொடர்ந்தும் காணப்பட்டு, 2024இல் 42.4 சதவீத பங்கொன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. பணிகள் மற்றும் கைத்தொழில் ஆகிய இரு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட வலுவான நடவடிக்கைகளில் மேல் மாகாணத்தின் முக்கியத்துவம் தெளிவாகப் புலப்பட்டது. அதேவேளை, 2024இல் பொருளாதாரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது உயர்ந்தளவிலான பங்குகளை முறையே வடமேல் (11.5 சதவீதம்) மற்றும் மத்திய (10.7 சதவீதம்) மாகாணங்கள் பதிவுசெய்துள்ளன. மேலும், மத்திய, கிழக்கு, வடமேல், சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலிருந்தான பெயரளவு மொ.உ.உற்பத்திகான பங்களிப்புக்கள் 2023 உடன் ஒப்பிடுகையில் 2024இல் அதிகரித்தன.

முழுவடிவம்

Published Date: 

Monday, December 22, 2025