கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்)இ மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 செத்தெம்பரில் 67.6 இனை அடைந்து 2021இ;ன் பிந்திய பகுதி தொடக்கம் அவதானிக்கப்பட்ட நடடிவக்கையில் வலுவான அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. தொடர்ச்சியாக கருத்திட்ட வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றமை கட்டடவாக்கத்துறையில் வளர்ச்சிக்கு உறுதியாக துணையளித்துள்ளது என பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.
ஏறத்தாழ அனைத்து வகையான கட்டடவாக்கக் கருத்திட்டங்களும் குறிப்பாக வீதி புனர்நிர்மாணக் கருத்திட்டங்கள் தற்போது கிடைக்கத்தக்கவையாகவிருந்து அநேகமான அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் தெரிவித்தனர். இது செத்தெம்பரில் புதிய கட்டளைகள் சுட்டெண்ணில் மேலும் அதிகரிப்பொன்றினைத் தூண்டியது. மேலும், தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண்கள் இரண்டும் செத்தெம்பரில் விரிவடைந்து, கட்டடவாக்கத் துறைக்கு சாதகமான வாய்ப்புக்களைக் காண்பிக்கின்றன. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம் இம்மாத காலப்பகுதியில் நீட்சியடைந்து காணப்பட்டது.
 
            









