மைத்திரி எவன் விக்ரமசிங்க, சனாதிபதி சட்டத்தரணி
திரு. விக்ரமசிங்க, சனாதிபதி சட்டத்தரணியாவதுடன் பட்டயம் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனத்தின் (ஐக்கிய இராச்சியம்) சக உறுப்பினரும் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ சட்டமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றங்களிலும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நடுத்தீர்ப்புக்களிலும்; தோன்றி சட்டத்தொழில் புரிபவருமாவார். இவர் தேசிய மற்றும் சர்வதேச நடுத்தீர்ப்புக்களில் நடுத்தீர்ப்பாளரொருவராகவும் தொழிற்படுவதுடன் வெளிநாட்டு வழக்காடல்களுக்காக இலங்கைச் சட்டங்கள் பற்றிய நிபுணத்துவ ஆலோசனை வழங்குபவராகவும் இருந்துவருகின்றார்.
திரு. விக்ரமசிங்க பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீடுகள் சபையின் தலைவராக இருப்பதுடன் இலங்கையின் அயாட்டி நம்பிக்கைப் பொறுப்புச் சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர் ஒருவராக ஹெல்ப் ஏஜ் சிறிலங்காவின் ஆளும் சபை உறுப்பினர் ஒருவராகவும் பணியாற்றுகின்றார். இவர் கென்வீனியன்ஸ் பூட்ஸ் லங்கா பிஎல்சியின் சுயாதீன நிறைவேற்றுத்தரமல்லாத பணிப்பாளர் ஒருவராகவும் பணியாற்றுவதுடன் அதன் ஆளுகை, நியமனக் குழு மற்றும் ஊதியக் குழு என்பவற்றின் தலைவராகவும் உள்ளார்.
திரு. விக்ரமசிங்க பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கியொன்றின் மூத்த சுயாதீனப் பணிப்பாளர் மற்றும் அதன் கணக்காய்வு மீளாய்வுக் குழு அத்துடன் நியமனங்கள் குழு என்பவற்றின் தலைவர் பதவிகளையும் முன்னர் வகித்துள்ளார். இவர் பட்டியலிடப்பட்ட பல்கூட்டு நிறுவனமொன்றின் சுயாதீனப் பணிப்பாளரும் அதன் கணக்காய்வுக் குழுவின் தலைவராகவும் ஊதியக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
திரு. விக்ரமசிங்க கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கொத்தலாவல பாதுகாப்பு கல்வி நிறுவனம் என்பவற்றில் முன்னாள் வருகைதரு விரிவுரையாளராகவும் பரீட்சகராகவும் இருந்தார். இலங்கைப் பட்டயக் காணக்காளர்கள் நிறுவகத்தில் பரீட்சகரொருவராகவும் இவர் தொழிற்பட்டதுடன் கல்கிசை புதிய தோமா கல்லூரியின் ஆளுநர்கள் மற்றும் முகாமையாளர் சபையின் உறுப்பினரொருவராகவும் தொழிற்பட்டார்.