தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டுக்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 மாச்சில் குறிப்பிடத்தக்க விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 மாச்சில் 63.9 பெறுமதியினை அடைந்து, நான்கு ஆண்டுகளில் அதன் அதி கூடிய பெறுமதியினைப் பதிவுசெய்தது. தயாரிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்களவு மேம்பாட்டினைப் பிரதிபலித்து மாதத்திற்கு மாத விரிவடைதலைப் பதிவிட்ட அனைத்துத் துணைச் சுட்டெண்களும் வலுவான பருவகாலக் கேள்வியினால் தூண்டப்பட்டிருந்தன.

புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தித் துணைச் சுட்டெண்களில் குறிப்பாக உணவு மற்றும் குடிபானங்கள், புடவை மற்றும் அணியும் ஆடைத் தயாரித்தல் துறைகளினுள் சடுதியான அதிகரிப்புக்கள் ஒட்டுமொத்த சுட்டெண் வளர்ச்சிக்குப் பிரதானமாக பங்களித்திருந்தன. மேலும், புதிய கட்டளைகள்  மற்றும்  உற்பத்தி என்பவற்றில் அதிகரிப்புகளுக்கு இசைவாக மாத காலப்பகுதியில் தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளில் இருப்பு என்பனவும் விரிவடைதல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம் மாச்சில் நீட்சியடைந்து காணப்பட்டது.  

முழுவடிவம்

Published Date: 

Thursday, April 17, 2025