இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபைக்கு இரண்டு புதிய உறுப்பினர்களின் நியமனம்

 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபை, இலங்கை மத்திய வங்கியின் நிருவாகம் மற்றும் அலுவல்களின் முகாமைத்துவம் என்பனவற்றை மேற்பார்வை செய்வதற்கான பொறுப்புக்களைக் கொண்ட சபையாகவும் இலங்கை மத்திய வங்கியின் பொதுவான கொள்கைகளைத் தீர்மானிக்கும் சபையாகவும் நிறுவப்பட்டிருக்கிறது.

ஆளுகைச் சபை

 ஆளுகைச் சபையானது ஆளுகைச் சபையின் தலைவராகச் செயலாற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான முனைவர். பி. நந்தலால் வீரசிங்க, திரு. ஏ. என் பொன்சேகா (2022.07.27 இலிருந்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் நியமன உறுப்பினராக இருந்த இவர் ஆளுகைச் சபையின் உறுப்பினராகத் தொடர்ந்தும் பணியாற்றுகின்றார்) முனைவர். ரவி ரத்னாயக்க (2023.09.21 அன்று நியமிக்கப்பட்டார்), திரு. அனுஷ்க எஸ் விஜயசிங்க (2023.09.21 அன்று நியமிக்கப்பட்டார்) மற்றும் திரு. விஷ்  கோவிந்தசாமி (2023.10.26 அன்று நியமிக்கப்பட்டார்) ஆகியோரை உள்ளடக்கியிருக்கிறது.

மேலும், நாம் இத்தால் திரு. ரஜீவ் அமரசூரிய மற்றும் திரு. மணில் ஜயசிங்க ஆகியோர் ஆளுகைச் சபைக்கு நியமிக்கப்பட்டிருப்பது பற்றி அறியத் தருகிறோம். புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரக் குறிப்புக்கள் பின்வருமாறு தரப்படுகின்றன.

முழுவடிவம்

Published Date: 

Monday, February 12, 2024