ரஜீவ் அமரசூரிய
திரு. ரஜீவ் அமரசூரிய இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் தலைவராக இருப்பதுடன் பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒப்பந்தம், வர்த்தகம், ஆதனம், வரி விதிப்பு, வங்கித்தொழில் மற்றும் சட்டத்தின் ஏனைய துறைகள் உட்பட சிவில் சட்டவாக்கங்கள் தொடர்பான பெரும்பாலான துறைகளில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீண்ட காலமாக செயலாற்றுகின்ற அனுபவத்தினைக் கொண்டவர்.
திரு. அமரசூரிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்ட ஆய்வுகளின் நிலையியல் குழு, மீஉயர் நீதிமன்றக் கட்டடத்தொகுதி முகாமைத்துவச் சபை மற்றும் சட்டக் கல்விச் சபை உட்பட, அநேக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் சபை/ குழு உறுப்பினராக இருந்து வருகிறார். அவர், பொதுநலவாய சட்டக் கல்விச் சங்கத்தின் இலங்கையின் நாட்டிற்கான பிரதிநிதியாகவும் லோ ஆசியாவின் (LAWASIA) நிறைவேற்றுக் குழு உறுப்பினருமாவார்.
இவர் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், இலங்கை தேசிய வணிக நிலையத்தின் ஆளுநர்கள் சபை உறுப்பினரும், இலங்கை கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபை உறுப்பினரும், கொழும்பு பல்கலைக்கழக சபை உறுப்பினரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தின் உடனடி முற்போர்ந்த கடந்தகால தலைவருமாவார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத் துறையில் பட்டம் பெற்ற இவர் இலங்கை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக விளங்குவதுடன் சட்டத்தரணிகள் இறுதிப் பரிட்சையில் முதல் இடத்தைப் பெற்றதுடன் முகாமைத்துவக் கணக்காளர்கள் பட்டய நிறுவகத்தின் உறுப்பினராகவும் இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவகத்தின் உறுப்பினராகவும் விளங்குவதுடன் ஹவார்ட் கென்னடி ஸ்கூலின் (நிறைவேற்றுக் கல்வி) பழைய மாணவருமாவார். 2022 ஏப்பிறலில், அவருக்கு AFGG – ரைஸ்சினா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
013இல் முகாமைத்துவக் கணக்காளர் பட்டய நிறுவகத்தின் 40 வயதிற்குட்பட்ட மிகச் சிறந்த உறுப்பினருக்கான முகாமைத்துவக் கணக்காளர் பட்டய நிறுவகத்தின் நட்சத்திர தங்க விருதையும் 2021இல் முகாமைத்துவக் கணக்காளர் பட்டய நிறுவகம் - LMD ரெயில்பிளாஸர் என்ற நாமத்தினையும் தனதாக்கிக் கொண்டவர்.