இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் முதலாவது மீளாய்வு தொடர்பிலான அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதியம் எட்டியுள்ளது

48 மாத காலம் கொண்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட செயற்றிட்டத்தின் முதலாவது மீளாய்வினை நிறைவுசெய்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் எட்டியுள்ளனர். பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை என்பவற்றினால் மீளாய்விற்கான ஒப்புதலளிக்கப்பட்டவுடன் சி.எ.உ 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 330 மில்லியன்) தொகைக்கான நிதியிடல் இலங்கைக்குக் கிடைக்கக்கூடியதாகவிருக்கும்.

பேரண்டப்பொருளாதார கொள்கை மறுசீரமைப்புக்கள் பலனளிக்கத் தொடங்கியுள்ளதுடன் பொருளாதாரம் உறுதிப்பாட்டின் தற்காலிக சமிக்ஞைகளைக் காண்பிக்கின்றது. மறுசீரமைப்பு உத்வேகத்தினை நிலைபெறச்செய்தல் மற்றும் ஆளுகைப் பலவீனங்கள் மற்றும் ஊழலினால் பாதிப்படையக்கூடியதன்மைகளை நிவர்த ;தி செய்தல் என்பன பொருளாதாரத்தினை நீடித்து நிலைத்திருக்கின்ற மீட்சி மற்றும் நிலையான மற்றும் அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சி என்பவற்றினை நோக்கிய பாதையில் கொண்டு செல்வதற்கு இன்றியமையாதனவாகும்.

பன்னாட்டு நாணய நிதியத ;தின் நிறைவேற்றுச் சபையின் மூலம் மீளாய்வினை நிறைவு செய்தலானது பின்வருவனவற்றைத் தேவைப்படுத்துகின்றது: (i) அனைத்து முன்கூட்டிய நடவடிக்கைகளும் அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்துதல் மற்றும் (ii) நிதியிடல் உத்தரவாத மீளாய்வுகளின் நிறைவு.

முழுவடிவம்

Published Date: 

Friday, October 20, 2023