வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2023 ஓகத்து

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2023 ஓகத்தில் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியிலும் பார்க்க ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட உயர்ந்தளவிலான வீழ்ச்சியினால் உந்தப்பட்டு விரிவடைந்தது. இருப்பினும், 2023 யூலையுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் இறக்குமதிச் செலவினம் ஆகிய இரண்டும் அதிகரித்தன.

தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் ஆகிய இரண்டும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஓகத்தில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைப் பதிவுசெய்தன.

2023 ஓகத்தில், அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடு தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தவேளையில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு முதலீடுகள் 2023 ஓகத்தில் தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.

மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2023 ஓகத்து இறுதியளவில் ஐ.அ.டொலர் 3.6 பில்லியன் தொகையாக விளங்கின.

இலங்கை ரூபாவானது 2023 ஓகத்தில் ஐ.அ.டொலரிற்கெதிராகப் பரந்தளவிலான உறுதித்தன்மையினைத் தொடர்ந்தும் கொண்டிருந்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, October 2, 2023