இலங்கை மத்திய வங்கியின் ஆளும் சபை

அண்மையில் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் புதிதாக தாபிக்கப்பட்ட ஆளும் சபைக் கூட்டம், 2023 செத்தெம்பர் 21ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் சபை அறையில் இடம்பெற்றது. 

நாணய விதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் முன்னர் தொழிற்பட்ட நாணயச் சபைக்கு பதிலாக புதிதாக தாபிக்கப்பட்ட ஆளும் சபை தொழிற்படுகின்றது. 

மத்திய வங்கியின் புதிய ஆளும் சபையின் இன்றைய கூட்டமானது பின்வரும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது:-

  • அ) இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், முனைவர். நந்தலால் வீரசிங்க - தலைவர்
  • ஆ) சனாதிபதி சட்டத்தரணி, திரு. சஞ்ஜீவ ஜயவர்தன - முன்னர் நாணயச் சபையின் உறுப்பினராகவும் இருந்தார்,
  • இ) திரு. நிஹால் பொன்சேகா - முன்னர் நாணயச் சபையின் உறுப்பினராகவும் இருந்தார்,
  • ஈ) முனைவர். ரவி ரத்நாயக்க, 
  • உ) திரு. அனுஷ்க விஜேசிங்க.

ஆளுநர் வீரசிங்க, புதிதாக தாபிக்கப்பட்ட ஆளும் சபைக்கு சஞ்ஜீவ ஜயவர்தன சனாதிபதி சட்டத்தரணி, திரு. நிஹால் பொன்சேகா, முனைவர் ரவி ரத்நாயக்க மற்றும் திரு. அனுஷ்க விஜேசிங்க ஆகியோரை வரவேற்றார்.

புதிதாக அமைக்கப்பட்ட ஆளும் சபையின் இவ் உறுப்பினர்கள், புதிதாக தாபிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் உறுப்பினர்களாகவும் இருப்பர். நாணயக் கொள்கை சபை அதன் முதலாவது கூட்டத்தை விரைவில் கூட்டவுள்ளது.  

Published Date: 

Thursday, September 21, 2023