சட்டவிரோதமான பிரமிட் திட்டங்கள் பற்றிய பொதுமக்கள் முறைப்பாடுகள்

இணையவழித் தளங்க;டாகத் தொழிற்படுகின்ற சில திட்டங்கள் அவை சட்டபூர்வமான திட்டங்கள் என்பதனை நியாயப்படுத்தும் முயற்சியொன்றாக கீழே குறிப்பிடப்பட்டவை போன்ற சில விடயங்களைக் குறிப்பிட்டு இத்திட்டங்களில் பணத்தை வைப்புச் செய்யுமாறுஃமுதலிடுமாறு முதலீட்டாளர்களை தவறாக வழிநடாத்துகின்றன என்பதனைக் குறித்துக்காட்டுகின்ற பல முறைப்பாடுகள் அண்மையில் இலங்கை மத்திய வங்கிக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

  • இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இத்திட்டம் முதலீட்டாளர்களின் நிதியங்களைப் பாதுகாக்கின்றது;
  • இத்திட்டமானது தொடர்புடைய வரிகளை அரசாங்கத்திற்குச் செலுத்துகின்றது; 
  • நிதியங்களை மீளப்பெறும் பொருட்டு இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் தமது நிதியங்களிலிருந்து தனிப்பட்ட வருமான வரியை இலங்கை மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டும், இன்றேல் அவர்களது நிதியங்கள் இலங்கை மத்திய வங்கியினால் முடக்கப்படும்;
  • இத்திட்டம் இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது.

மேற்குறித்த கூற்றுக்களை இலங்கை மத்திய வங்கி முழுமையாக நிராகரிப்பதுடன் இக்கூற்றுக்களில் உண்மையேதுமில்லை என பொதுமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றது. 

இலங்கை மத்திய வங்கியினால் உரிமமளிக்கப்பட்டு ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களின் அட்டவணை இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளத்திலும் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் வலைத்தளத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் பின்வரும் இணைப்புக;டாகப் பார்வையிடலாம்.

https://www.cbsl.gov.lk/authorized-financial-institutions

https://www.dfe.lk/web/index.php?option=com_content&view=article&id=82&Itemid=513&lang=en

இவ்வகையான திட்டங்கள் பற்றி அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குகின்றது.

மேலும், இவ்வாறான திட்டங்களில் ஈடுபடுவதனூடாக பொதுமக்கள் பாடுபட்டு உழைத்த பணத்தை இழக்கலாம் என்பதனால் அத்தகைய திட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் முதலிட வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குகின்றது. 

 

Published Date: 

Thursday, August 24, 2023