வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2023 மாச்சு

வர்த்தகப் பற்றாக்குறையானது 2023 பெப்புருவரியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்து காணப்பட்டபோதிலும் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2023 மாச்சில் தொடர்ந்தும் மிதமடைந்து காணப்பட்டது.

தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் என்பன 2023 மாச்சில் குறிப்பிடத்தக்களவிலானதொரு மேம்பாட்டினைப் பதிவுசெய்தன

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் இறுதிப்படுத்தல் மற்றும் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட கொள்கைத் தளர்வினால் உந்தப்பட்டு உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் திரவத்தன்மை நிலைமைகளில் ஏற்பட்ட மேம்பாடுகள் என்பவற்றினை நோக்கிய மேம்பட்ட சந்தை மனோபாவங்களினால் ஆதரவளிக்கப்பட்டு 2023 மாச்சில் செலாவணி வீதம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்தது

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரச பிணையங்கள் மீது அதிகரித்த ஆர்வத்தை காட்டிய அதேவேளையில் 2023 மாச்சு காலப்பகுதியில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனைக்கான தேறிய வெளிநாட்டு முதலீடுகள் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன

இம்மேம்பாடுகள் 2023 மாச்சு இறுதியளவில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை வலுப்படுத்தின

முழுவடிவம்

Published Date: 

Friday, April 28, 2023