இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2023 மாச்சு

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டுக்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 மாச்சில் சாதகமான எல்லைக்குத் திரும்பின.

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்இ தொடர்ச்சியாக ஒன்பது அளவீட்டு காலங்களின் பின்னர், 2023 மாச்சில் 51.4 சுட்டெண் புள்ளியினைப் பதிவுசெய்து சாதகமாக மாறியது. பிரதானமாக பருவகால கேள்வியின் காரணமாக புதிய கட்டளைகள், உற்பத்தி துணைச் சுட்டெண்களில் அதிகரிப்பினால் மாதத்திற்கு மாத இவ்விரிவடைதல் தூண்டப்பட்டிருந்தது. எனினும்,  தொழில்நிலை, கொள்வனவுகளின் இருப்பு மற்றும் நிரம்பலர் விநியோக நேரம் துணைச் சுட்டெண்கள் நடுநிலையான அடிப்படை அளவிற்கு கீழேயே காணப்பட்டன. 

புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி என்பனவற்றில் இவ்வதிகரிப்பானது  உணவு மற்றும் குடிபானங்கள் துறையின் தயாரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்த அதேவேளை, எதிர்வரவுள்ள பண்டிகை பருவகாலத்திற்கு வழங்கல்செய்வதற்கு முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் உயர்வான கேள்வியினை அவர்கள் எதிர்கொண்டதாக பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர். எனினும், அநேகமாக ஓய்வுபெறுதல்கள் மற்றும் பதவிவிலகுதல்கள் பதிலீடுசெய்யப்படாமையின் காரணமாக தொழில்நிலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. மேலும், எதிர்வரவுள்ள காலப்பகுதியில் மூலப்பொருட்களின் விலைகளில் வீழ்ச்சியினை எதிர்பார்த்து புதிய கொள்வனவுகளைத் தாமதப்படுத்தி மூலப்பொருட்களுக்காக தமது கையிருப்புகளை சில நிறுவனங்கள் பயன்படுத்தியமையினால் கொள்வனவுகளின் இருப்பு மாச்சு மாதத்திலும் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை நிரம்பலர் விநியோக நேரம், மாத காலப்பகுதியில் சிறிதளவு குறுக்கமடைந்தது. 

முழுவடிவம்

Published Date: 

Monday, April 17, 2023