இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையினை மேலும் இறுக்கமாக்கியுள்ளது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 யூலை 06ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதத்திற்கும் 15.50 சதவீதத்திற்கும் 100 அடிப்படை புள்ளிகளால் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. அண்மையில் எதிர்பார்த்ததை விட உயர்வாக முதன்மைப் பணவீக்கம் உயர்வடைந்தமை அத்துடன் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் அதிகரித்த விடாப்பிடியான உயர்வான பணவீக்கம் என்பவற்றை கவனத்திற் கொண்டு, நாணயக் கொள்கையினை மேலும் இறுக்கமடையச் செய்தலானது ஏதேனும் பாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் அதிகரிப்பதனைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமானதாகவிருக்குமென சபை அபிப்பிராயப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை மேற்கொள்கையில், சபையானது அண்மைக்காலத்தில் அனைத்து பொருளாதார துறைகளுக்கிடையிலும் ஏதேனும் விலை அழுத்தங்கள் உயர்வடைதலின் பரந்தளவான பாதகமான விளைவுகளுக்கு எதிராக, ஏனையவைகளுக்கு மத்தியில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகள் அத்துடன் நிதியியல் துறை செயலாற்றம் என்பவற்றின் மீது இறுக்கமான நாணய நிலைமைகளின் தாக்கத்தின் மீது கவனம் செலுத்தியிருந்தது. அனைத்து காரணிகளையும் பரிசீலனையிற் கொள்கையில், இக்கொள்கை சீராக்கமானது நடுத்தரகாலத்தில் பணவீக்க எதிர்பார்க்கைகளை முதன்மைப் பணவீக்கத்தின் இலக்கிடப்பட்ட அளவிற்கு அண்மித்து நிலைநிறுத்துவதற்கு உதவுவதற்கு வழிகாட்டுகின்ற அதேவேளை பொருளாதாரத்தில் ஏதேனும் ஏதுவாகின்ற கேள்வி அழுத்தங்கள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துமென சபை அபிப்பிராயப்பட்டுள்ளது.

முழு வடிவம்

Published Date: 

Thursday, July 7, 2022