நெருக்கடிகாலத் தொடா்பூட்டல்

வெளிநாட்டுப் பணவனுப்பல்கள்

நெருக்கடிமிக்க இக்காலப்பகுதியில் இடைத்தடங்கலற்ற கொடுப்பனவுகளை வசதிப்படுத்துவதற்கு இலங்கையின் பொருளாதாரத்திற்கு நன்மைபயக்கும் விதத்ததில் நீங்கள் வெளிநாட்டிலிருந்து எவ்வாறு பணப்பரிமாற்றம் செய்யலாம்?

எரிபொருள், எரிவாயு, உணவு, மருந்து போன்ற அத்தியாவசிப் பண்டங்களுக்கான வெளிநாட்டுச் செலாவணிக் கொடுப்பனவை வசதிப்படுத்துவதற்கு உரிமம்பெற்ற வங்கிகளையும் இலங்கை மத்திய வங்கியையும் இயலச்செய்து நாட்டிற்கு வெளிநாட்டுச் செலாவணி கிடைப்பனவினை உறுதிசெய்வதற்கு உங்களது பெறுமதிமிக்க வெளிநாட்டுச் செலாவணியிலான உழைப்புகளை இலங்கைக்கு அனுப்புவதற்காக முறைசார்ந்த நிதியியல் வழிகளைப் பயன்படுத்துங்கள். ஆகையினால், முறைசார்ந்த வழிகளூடாக உங்களது உழைப்புகளை அனுப்புவது இக்கட்டான இக்காலகட்டத்தில் நாட்டிற்கு மகத்தான நன்மையளிப்பதாக அமையும்.

இலங்கைக்கு பணப் பரிமாற்றல் செய்வதற்கான முக்கிய முறைசார்ந்த வழிமுறைகள்

      • இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற வங்கியொன்றுக்கு உங்களது வெளிநாட்டு வங்கி ஊடாக நேரடியாக பணத்தினை அனுப்புதல்
      • இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற வங்கியொன்றிலுள்ள கணக்கிற்கு அல்லது பயன்பெறுநருக்கு வெளிநாட்டிலுள்ள நன்மதிப்புப் பெற்ற பணப்பரிமாற்றல் தொழிற்படுத்துநர்கள்/பரிமாற்றல் நிலையங்கள் ஊடாக பணம் அனுப்புதல்.
      • இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற வங்கியிலுள்ள கணக்கொன்றிற்கு அல்லது பயன்பெறுநருக்கு இலங்கை நிதியியல் நிறுவனங்களுடன்/நன்மதிப்புப் பெற்ற பணப் பரிமாற்றல் தொழிற்படுத்துநர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ள இணையவழித்தளங்கள்/செயலிகள் ஊடாக பணம் அனுப்புதல்.