பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை கணிசமானளவு இறுக்கமடையச் செய்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 2022 ஏப்பிறல் 08 வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 700 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. கூட்டுக் கேள்வி கட்டியெழுப்பப்படுதல், உள்நாட்டு நிரம்பல் இடையூறுகள், செலாவணி வீத தேய்மானம் மற்றும் உலகளாவிய ரீதியில் பண்டங்களின் உயர்வடைந்த விலைகள் போன்றவற்றினால் உள்நாட்டில் எதிர்வரும் காலத்தில் பணவீக்க அழுத்தங்கள் மேலும் கடுமையடையக் கூடுமென்பதனைக் கரிசனையில் கொண்டு நாணயச் சபையானது பொருளாதாரத்தில் மேலதிகக் கேள்வித் தூண்டல் பணவீக்க அழுத்தங்கள் கட்டியெழுப்பப்படுவதனை இல்லாதொழிப்பதற்கும் மோசமான பணவீக்க எதிர்பார்ப்புக்கள் உயர்வடைவதனை முன்கூட்டியே தடுப்பதற்கும் செலவாணி வீதத்தினை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் உத்வேகத்தினை வழங்குவதற்கும் வட்டி வீதக் கட்டமைப்பில் அவதானிக்கப்பட்ட ஒழுங்கீனங்களினைத் திருத்தியமைப்பதற்கும் கணிசமான கொள்கைப் பதிலிறுப்பு இன்றியமையாததெனினும் கருத்தினைக் கொண்டுள்ளது. 

முழுவடிவம்

 

Published Date: 

Friday, April 8, 2022