வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் முதன்மைத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் முதன்மைத் திட்டத்தின் (முதன்மைத் திட்டம்) கீழ், பின்வரும் 9 நிறுவனங்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத் தேவைப்பாடுகளை நிறைவுசெய்வதற்காக   ஏற்கனவே ரூ. 12.56 பில்லியன் கொண்ட புதிய மூலதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளன: அவை, சர்வோதய டெவலப்மென்ட் பினான்ஸ் பிஎல்சி, டயலொக் பினான்ஸ் பிஎல்சி, ஏசியா எசட் பினான்ஸ் பிஎல்சி, லங்கா கிறடிட் அன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி, பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் பினான்ஸ் பிஎல்சி, சொப்ட்லொஜிக் பினான்ஸ் பிஎல்சி, மேர்ச்சன்ட் பாங்க் ஒவ் சிறிலங்கா அன்ட் பினான்ஸ் பிஎல்சி, யு பீ பினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் றிச்சட் பீரிஸ் பினான்ஸ் லிமிடெட்.

முழுவடிவம்

Published Date: 

Monday, January 31, 2022