நிதியியல் உளவறிதல் பிரிவின் மூலம் 2021ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கான நிருவாகத் தண்டங்களை விதித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டமானது நிதியியல் நிறுவனத்தின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமை என்பவற்றைப் பரிசீலனையில்கொண்டு குறித்துரைக்கப்படக்கூடியதாகும்.

அதற்கமைய, பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துநராக நிதியியல் உளவறிதல் பிரிவானது நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு 2021 ஏப்பிறல் 01 தொடக்கம் 2021 யூன் 30 வரையான காலப்பகுதிக்காக மொத்தமாக ரூ.3.0 மில்லியன் தொகையுடைய தண்டங்களை விதித்துள்ளது. தண்டங்களாகச் சேகரிக்கப்பட்ட பணம், திரட்டு நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் அனுமதிப் பரிசோதனைகள், வாடிக்கையாளரொருவருடன் வியாபார உறவு நடவடிக்கையினூடாக மேற்கொள்ளப்படுகின்ற கொடுக்கல்வாங்கல்கள் பற்றிய முன்னெடுக்கப்படுகின்ற பரிசோதனை, முறையான இடர்நேர்வுக் கட்டுப்பாடுகள் மற்றும் தணிப்பு வழிமுறைகளை கண்காணித்து நடைமுறைப்படுத்தல் செயன்முறையினை உறுதிசெய்வதற்கான நடைமுறைகள் மற்றும் முறைமைகளை தாபித்துப் பேணுதல் என்பன தொடர்பில் 2016ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதியியல் நிறுவனங்கள் (வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவனம்) விதிகளின் மீறுகைகள் மீது தண்டங்கள் முக்கியமாக விதிக்கப்பட்டிருந்தன.

2021 ஏப்பிறல் 01 தொடக்கம் 2021 யூன் 30 வரை நிதியியல் உளவறிதல் பிரிவினால் விதிக்கப்பட்ட தண்டங்களின் விபரங்கள் பின்வருமாறு:  

விதிக்கப்பட்ட திகதி     நிறுவனம்                                                                  தொகை (ரூபா)
2021 மே 28 யூனியன் பாங் ஒவ் கொழும்பு பிஎல்சி 2,000,000.00
2021 மே 31 டிஎவ்சிசி பாங் பிஎல்சி 1,000,000.00

Published Date: 

Tuesday, July 20, 2021