இலங்கை மத்திய வங்கியானது 1950 ஓகத்தில் அதன் தொழிற்பாடுகளைத் தொடங்கி இலங்கையின் சுபீட்சத்திற்கு அதன் தனித்துவமும் பெறுமதிவாய்ந்ததுமான பங்களிப்பின் 70 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. அதன் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கை மத்திய வங்கி, பின்வரும் முக்கிய அம்சங்களுடன் சுற்றோட்டத்திற்கு விடப்படாத ரூ.20 வகை ஞாபகார்த்த குற்றியொன்றினை வெளியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.
-
The Central Bank of Sri Lanka issues an Uncirculated Commemorative Coin to mark its 70th Anniversary
-
Sri Lanka Prosperity Index - 2019
இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணானது “பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்” மற்றும் “சமூக-பொருளாதார உட்கட்டமைப்பு” ஆகிய துணைச் சுட்டெண்களின் சிறிதளவான வீழ்ச்சிகளுடன் 2018இன் 0.811 உடன் ஒப்பிடுகையில் 2019இல் 0.802 ஆகப் பதிவாகியது. அதேவேளை, “மக்கள் நலனோம்புகை” துணைச் சுட்டெண் ஆண்டுகாலப்பகுதியில் மேம்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் தொடர்புபட்ட கைத்தொழில்கள் மீது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் கசிவுத் தாக்கங்கள் தொழிலின்மையில் அதிகரிப்பொன்றினை ஏற்படுத்தியமை அத்துடன் 2019இன் பிந்திய பகுதியை நோக்கிய மோசமான வானிலை நிலைமைகளின் காரணமாக ஒப்பீட்டளவில் உயர்வான பணவீக்கம் என்பன பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண்ணில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு பற்றிய கரிசனைகளின் காரணமாக பொதுப் போக்குவரத்தினைக் குறைவாகப் பயன்படுத்தியமை சமூக-பொருளாதார உட்கட்டமைப்புச் சுட்டெண்ணில் வீழ்ச்சிக்கு முக்கிய ஏதுவாக அமைந்தது.
-
Announcement of the Road Map: Monetary and Financial Sector Policies for 2021 and Beyond
வழிகாட்டல்: 2021ஆம் ஆண்டிற்கும் அதற்கும் அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மூலம் 2021 சனவரி 04ஆம் திகதியன்று அறிவிக்கப்படும்.
தற்போது நிலவுகின்ற கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் நிலைமையின் காரணமாக வழிகாட்டல் பற்றிய எடுத்துரைப்பு மெய்நிகராக இடம்பெறும் என்பதுடன் காணொளி 2021 சனவரி 04ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 11.00 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளம் ஊடாகக் கிடைக்கப்பெறும்.
-
The Central Bank takes Steps to Stem the Undue Depreciation of the Rupee
செலாவணி வீதத் தளம்பலின் அண்மைக்கால அதிகரிப்பு அடிப்படையற்றதும் ஏற்றுக்கொள்ளமுடியாததும் என மத்திய வங்கி கருதுகின்றது. அதற்கமைய, ஏனைய வழிமுறைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டு செலாவணி சந்தையில் தளம்பல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதற்குப் பின்னர் பொருத்தமான தீவிர நடவடிக்கைகளை எடுக்கும். இந்நடவடிக்கைகள், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியினை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதுடன் ஒன்றிணைந்து 2020 நவெம்பரில் அவதானிக்கப்பட்ட ஐ.அ.டொலர் ஒன்றுக்கு ரூ.185 இற்குக் கீழ் மட்டங்களை நோக்கி அடுத்துவரும் சில நாட்களினுள் ரூபா உயர்வடைவதை இயலச்செய்யும்.
-
NCPI based Inflation decreased in November 2020
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஒத்தோபரின் 5.5 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2019 நவெம்பரில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 ஒத்தோபரின் 10.6 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 9.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 1.5 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 ஒத்தோபரில் 6.2 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 6.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.
-
Provincial Gross Domestic Product - 2019
நாட்டின் வர்த்தக மற்றும் நிர்வாக தலைநகரத்தை தன்னகத்தே கொண்ட மேல் மாகாணம், பொருளாதாரத்தின் முன்னோடியாக தொடர்ந்தும் விளங்கியது. எனினும் பிராந்திய ஏற்றத்தாழ்வு சுருக்கமடைவதற்கு பங்களித்து அதன் பங்கு வீழ்ச்சியடைந்தது
நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாரிய பங்கினை (39.1 சதவீதம்) மேல் மாகாணம் தனதாக்கிக் கொண்டது. எனினும், ஏனைய மாகாணங்களில் கிடைத்த அதிகரித்த பங்களிப்பின் காரணமாக அதன் பங்கு 2018 இலிருந்து 0.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மத்திய (11.5 சதவீதம்) மற்றும் வடமேல் (10.7 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளுக்கு தரப்படுத்தப்பட்டன.
-
Appoinment of New Deputy Governors
நாணயச் சபையானது கௌரவ நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் திருமதி. ரி. எம். ஜே. வை. பி. பர்னாந்து மற்றும் திரு. என். டபிள்யு. ஜி. ஆர். டி. நாணயக்கார ஆகிய உதவி ஆளுநர்களை 2020 திசெம்பர் 14ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு பதவி உயர்த்தியுள்ளது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - November 2020
தயாரிப்புத் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2020 நவெம்பரில் விரிவடைந்த வேளையில், பணிகள் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மேல்நோக்கி திருப்பமடைந்த போதிலும் இன்னும் குறிப்பிடத்தக்களவு மட்டத்திற்கு கீழாகவே காணப்படுகிறது.
-
External Sector Performance - October 2020
2020 ஒத்தோபரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட முதிர்வடைந்த நாட்டிற்கான பன்னாட்டு முறியினை வெற்றிகரமாக மீளச்செலுத்தியதன் மூலம் அதன் தாக்குப்பிடிக்கும் தன்மையினை எடுத்துக்காட்டியது. வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியான மேம்படுத்தல், தொழிலாளர் பணவனுப்பல்களில் அதிகரிப்பு, உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஏற்பட்ட உறுதிப்பாடு என்பன மாத காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்திற்கு துணையளித்தன. குறைவான உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கீழ் இறக்குமதிகள் தொடர்ந்தும் கட்டுப்பட்டிருந்த அதேவேளை, ஒத்தோபரின் ஆரம்பம் தொடக்கம் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி மற்றும் துணைப் பணிகளுக்கான இடையூறுகளின் காரணமாகவும் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களிடமிருந்து கேள்வி குறைவடைந்தமை மூலமும் 2020 ஒத்தோபரில் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன.
-
Response to the Downgrade of Sri Lanka's Rating by S&P Global Ratings
இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தலினை தரங்குறைத்து எஸ் அன்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Ratings) மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியமைச்சு பதிலிறுத்தலொன்றினை வெளியிட்டுள்ளது. இதனை கீழேயுள்ள இணைய இணைப்பில் காணலாம்.