மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளைத் தொகுக்கின்ற ஏக பொறுப்பு 2007 இலிருந்து தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாட்டின் மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை மாற்றியமைப்பதில் இலங்கை மத்திய வங்கி தொடர்புபட்டிருக்கிறது என்ற பொருளில் ஆர்வமுடைய தரப்பினரால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பற்றி மத்திய வங்கி தனது அவதானிப்பினைச் செலுத்தியிருக்கிறது. இது பொதுமக்களைப் பிழையாக வழிநடத்துமொன்றாகும்.
-
The Department of Census and Statistics Compiles the Gross Domestic Product
-
Financial Intelligence Unit of Sri Lanka Entered into a Memorandum of Understanding with Securities and Exchange Commission of Sri Lanka
2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில் இலங்கை நிதியியல் உளவறில் பிரிவு பிணையங்கள் துறையில் பணம் தூயதாக்கலுக்கெதிரான பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலை முக்கிய கவனத்தில் கொண்டு அனைத்தையுமுள்ளடக்கிய இடர்நேர்வின் அடிப்படையிலும் மேற்பார்வையின் அடிப்படையிலும் கண்டறியப்பட்டவை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்காக இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை 2018 யூன் 19ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் மேற்கொண்டது.
-
Inflation in May 2018
தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 ஏப்பிறலின் 1.6 சதவீதத்திலிருந்து 2018 மேயில் 2.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2018 மேயில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உணவல்லா வகையில் காணப்படும் விடயங்களின் மேல்நோக்கிய விலைத் திருத்தங்களே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 ஏப்பிலின் 6.1 சதவீதத்திலிருந்து 2018 மேயில் 5.7 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - May 2018
தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட பருவகால சரிவடைதலை தொடர்ந்து மே மாதத்தில் மீட்சியடைந்து ஏப்பிறல் மாதத்திலிருந்து 15.1 சுட்டெண் புள்ளிகள் அதிகரித்து 60.6 சுட்டெண் புள்ளிகளை மே மாதத்தில் பதிவு செய்தது. கொ.மு.சுட்டெண்ணில் ஏற்பட்ட மீட்சிக்கு பிரதானமாக மாதகாலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய கடட் ளைகள் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக ஏப்பிறல் மாதத்தில் பூர்த்திசெய்யப்படாத கடட்ளைகள் என்பவற்றை பூர்த்தி செய்வதற்காக உற்பத்தி அதிகரித்திருந்ததுடன், இதற்கு விசேடமாக புடவைகள், அணியும் ஆடை, தோல் மற்றும் அதனுடன் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலான குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பெரிதளவில் பங்களித்திருந்தது. புதிய கட்டளைகள், கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் மாதகாலப்பகுதியில் அதிகரித்திருந்தன.
-
The International Monetary Fund Releases the Fifth Tranche of US dollars 252 million under the Extended Fund Facility
பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, இலங்கையுடனான 2018 உறுப்புரை IV ஆலோசனைகளை முடித்துக் கொண்டதுடன் மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் நான்காவது மீளாய்வினை நிறைவு செய்துள்ளதுடன் சிஎஉ 177.774 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 252 மில்லியன்) கொண்ட ஐந்தாவது தொகுதியினை விநியோகிப்பதற்கும் ஒப்புதலளித்தது. விரிவாக்கப்பட்ட நிதிய வசதியானது சென்மதி நிலுவைக்கும் அரசாங்கத்தின் பரந்த பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்கும் உதவியளிப்பதனை நோக்கமாகக் கொண்டிருந்தது.
-
External Sector Performance - March 2018
2018 மாச்சில் வெளிநாட்டுத் துறை கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. இறக்குமதி மீதான செலவினம் தொடர்ந்தும் அதிகரித்த போதும் 2018 மாச்சில் ஏற்றுமதிகள் வரலாற்றிலே மிகஉயர்ந்த மட்டத்தினை அடைந்ததன் மூலம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களையும்விட குறைந்த வர்த்தகப் பற்றாக்குறைக்குப் பங்களித்தது. 2018 மாச்சில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமையின் மூலம் 2018 சனவரியிலிருந்து அவதானிக்கப்பட்ட சாதகமான போக்கினைத் தொடர்ந்தும் காட்டின. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2018 பெப்புருவரியில் பதிவுசெய்யப்பட்ட வீழ்ச்சிக்கு மாறாக, இம்மாதகாலப்பகுதியில் உயர்வடைந்தன. அதேவேளை சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு மாச்சில், குறிப்பாக, அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை என்பனவற்றிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகள் எடுப்பனவு செய்யப்பட்டமையின் காரணமாக சில வெளிப்பாய்ச்சல்களைக் காட்டின. நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் தொடர்ந்தும் ஆரோக்கியமான மட்டத்தில் காணப்பட்டன.
-
Deshamanya Amarananda Somasiri Jayawardena, Former Governor of the Central Bank, Passes Away
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தேசமான்ய அமராநந்த சோமசிறி ஜயவர்த்தன அவர்களின் மறைவை அறிவிப்பதில் மத்திய வங்கி ஆழ்ந்த கவலையடைகின்றது. அவர் 2018 மே 29ஆம் திகதியன்று தனது 82ஆவது வயதில் காலமானார்.
தேசமான்ய ஏ.எஸ். ஜயவர்த்தன 1995 நவெம்பர் முதல் 2004 யூன் வரை பதவிவகித்த பத்தாவது ஆளுநராவார். இவர் 1958இல் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து கொண்டதுடன் பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளராக (1977-1980) நியமிக்கப்படுவதற்கு முன்னர் செயலகம், தாபனங்கள் மற்றும் பொருளாதார ஆராய்ச்சி ஆகிய திணைக்களங்களில் கடமையாற்றினார்.
-
External Debt and Reserves - Need to identify not only borrowings but also the debt repayments in analyzing how gross official reserves were utilized
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் மற்றும் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுகள் தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
செய்தி விடயத்தின் உள்ளடக்கமானது நாட்டின் வெளிநாட்டு நிலைமை தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற தோற்றப்பாடொன்று பற்றி விபரிக்கின்றது. 2015 – 2018 காலப்பகுதியில் அரசாங்கத்தின் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 8.9 பில்லியன் கொண்ட கடன்பாடுகள் மத்திய வங்கியின் ஒதுக்குகளுக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டதாக இது தெரிவிக்கின்ற அதேவேளையில், அரசாங்கத்தின் அலுவல்சார் படுகடன் முகாமையாளராக விளங்கும் மத்திய வங்கியினால் இக்காலப்பகுதியில் ஒதுக்குகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணிசமான படுகடன் மீள்கொடுப்பனவுகள் பற்றி இக்கட்டுரையானது கவனத்தில் கொள்ளவேயில்லை.
-
Purchasing Managers’ Index (PMI) Survey
2015 மே தொடக்கம் நாட்டின் தயாரிப்பு மற்றும் பணிகள் துறைகள் தொடர்பாக கொள்வனவு முகாமையாளர் சுட்டெண ;அளவீடொன்றினை நடத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்துள்ளது. இவ்வளவீட்டின் நோகக் ம் யாதெனில் கொள்வனவு தொழில்சார் நிபுணர்கள், வியாபாரத் தீர்மானங்களை மேற்கொள்வோா் மற்றும் பொருளாதாரப் பகுப்பாய்வாளர் ஆகியோர் தொழில்துறை நிலைமைகளைச் சிறந்த முறையில் விளங்கிக் கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு உரிய நேரத்தில் தரவுத் தொகுதியை வழங்குவதேயாகும். இவ்வளவீடானது, மாதாந்தம் திணைக்களத்தினால் நடத்தப்படுவதுடன் 2016 ஏப்பிறலில் ஒரு வருடச்சுற்று பூர்த்தியடைந்திருக்கிறது.
-
A Statement from the Governor of the Central Bank of Sri Lanka
மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அர்ஜூன மகேந்திரன் 2016 யூன் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாணயச் சபையின் கூட்டத்தில், 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் திறைசேரி முறிகளின் வழங்கல் தொடர்பான பிரச்சனைகள் பற்;றி அரச தொழில்முயற்சிகள் மீதான பாராளுமன்றக் குழு விடயங்களைக் கண்டறியும் வரை 2016 யூன் 30ஆம் நாள் வியாழக்கிழமை அவரது பதவிக் காலம் முடிவடையும் பொழுது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படுவதற்கான கோரிக்கை எதனையும் விடுக்கமாட்டார் என்பதனை அறிவித்திருக்கின்றார்.