கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிற்கு மாறாக 2017 மாச்சில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 9.8 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தன. எனினும், 2017 மாச்சில் வர்த்தகப் பற்றாக்குறையானது 2016இன் தொடர்பான மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பு, இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த அதிகரிப்பினால் எதிரீடு செய்யப்பட்டதன் காரணமாக விரிவடைந்தது. பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்திநிலையம் அதன் ஓடுபாதையின் தரைச் செப்பனிடல் வேலைகளுக்காக மூடப்பட்டிருந்தமையின் காரணமாக, சுற்றுலா வருவாய்கள் முன்னைய மாதத்தினைப் போன்றே 2017 மாச்சிலும் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை தொழிலாளர் பணவலுப்பல்களும் 2017 மாச்சில் வீழ்ச்சியைப் பதிவுசெய்தன.
-
External Sector Performance - March 2017
-
Appointment of a New Deputy Governor
நாணயச் சபை, மாண்புமிகு நிதியமைச்சரின் இணக்கத்துடன் உதவி ஆளுநர் கே. டி. ரணசிங்க அவர்களை 2017 ஏப்பிறல் 30ஆம் நாளிலிருந்து டைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவி உயர்த்தியிருக்கிறது.
திரு. கே. டி. ரணசிங்க
-
CBSL Denies Incorrect Media Reports on Qatari Riyals
"கட்டார் றியால்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது" என பல்வேறு ஊடக நிறுவனங்களினால் குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கைகளினை இலங்கை மத்திய வங்கி திட்டவட்டமாக மறுக்கின்றது.
-
External Sector Performance - February 2017
2017இல் சுற்றுலா வருவாய்களில் ஏற்பட்ட மிதமான தன்மை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட மிதமான வளர்ச்சி என்பனவற்றின் விளைவாக விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையின் காரணமாக இலங்கையின் வெளிநாட்டுத் துறை தொடர்ந்தும் குறைவடைந்த நிலையில் காணப்பட்டது. ஏற்றுமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மத்தியில் எரிபொருள் மற்றும் அரிசி என்பனவற்றின் உயர்ந்த இறக்குமதிகளின் முக்கிய காரணமாக பெப்புருவரியில் வர்த்தகப் பற்றாக்குறையில் கணிசமான விரிவொன்று அவதானிக்கப்பட்டது. ஓடுபாதையை செப்பனிடும் வேலைகளுக்காக பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் பகல் வேளையில் மூடப்பட்டிருந்தமையின் பகுதியளவு காரணமாக சுற்றுலா வருகைகளில் ஏற்பட்ட சிறிதளவு வீழ்ச்சி சுற்றுலாவிலிருந்தான வருகைகள் சிறிதளவில் வீழ்ச்சியடைய காரணமாயிற்று. பெப்புருவரியில் தொழிலாளர் பணவனுப்பல்களின் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட மட்டத்திற்கும் கீழேயே காணப்பட்டது.
-
Inflation in April 2017
தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013ஸ்ரீ100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 மாச்சில் 8.6 சதவீதத்திலிருந்து 2017 ஏப்பிறலில் 8.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2017 ஏப்பிறலின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கிய பங்களித்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 மாச்சில் பதிவுசெய்யப்பட்ட 5.6 சதவீதத்திலிருந்து 2017 ஏப்பிறலில் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
Central Bank releases the publication 'A Guide to Financial Services in Sri Lanka'
இலங்கையிலுள்ள நிதியியல் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஊட்டுவிப்பதற்காகவிசேடமாகத் தொகுக்கப்பட்ட “இலங்கையில் நிதியியல் பணிகளுக்கானதோர் வழிகாட்டி” என்ற புதியவெளியீடொன்றினை மத்திய வங்கி வெளியிட்டிருக்கிறது. இலங்கையில் அடிப்படை நிதியியல் பணிகள்தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவினை ஊட்டும் பொருட்டு, 1995 நவெம்பர் – 2004 யூன் வரை ஆளுநராகஇருந்த திரு. ஏ.எஸ். ஜயவர்த்தன அவர்கள் இந்நூலின் ஆசிரியரும் துணை ஆளுநருமான திரு. பி. சமரசிறிஅவர்களை இத்தகையதொரு நூலினைத் தொகுத்து வெளியிடுமாறு முன்மொழிந்து வழிகாட்டியமைக்கேற்ப,ஜயவர்த்தனை அவர்களை கௌரவித்து நன்றி தெரிவிக்கும் விதத்தில் நூலாசிரியரினால் 2002இல்முதற்றடவையாக இந்நூல் வெளியிடப்பட்டது.