• SL Purchasing Managers’ Index Survey - April 2017

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் பருவகால மாதிரியினை பின் பற்றி ஏப்பிறல் மாதத்தில் 41.8 கொண்ட சுட்டெண்ணினை பதிவு செய்ததுடன், இது, மாச்சு மாதத்துடன் ஒப்பிடுகையில் 24.7 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது 2017 ஏப்பிறலில் தயாரிப்பு நடவடிக்கைகள் சுருக்கமடைந்தமையினை குறித்து காட்டியதுடன் 2017 மாச்சில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை தொடர்ந்து உற்பத்தி மற்றும் புதிய கடட் ளைகள் துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட குறைவே பெரிதும் காரணமாக அமைந்தன. மேலும், அளவீட்டு பதிலிறுப்பாளர்களினால் எடுத்துக்காட்டப்பட்டவாறு ஏப்பிறலின் புத்தாண்டு விடுமுறைகளும் தயாரிப்பு நடவடிக்கைகளின் இந்த பருவகால நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைவுக்கு பங்களிப்பு செய்தன. மேலும், கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்து காணப்பட்டன.

  • Central Bank of Sri Lanka Clarifies Misleading News Reports on Statements Made by the Governor

    இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் 2017 மே 09ஆம் திகதி நடைபெற்ற பத்திரிகை மாநாட்டில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் பிழையாக வழிநடத்தும் செய்தி அறிக்கைகள் பற்றி மத்திய வங்கி, தங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறது. இச்செய்தித்தாள் அறிக்கைகள் ஊழியர் சேம நிதியத் திணைக்களத்திற்குப் பொறுப்பான உதவி ஆளுநரும் அலுவலர்களும் ஒழுங்கீனமான கொடுக்கல்வாங்கல்களூடாக ஊழியர் சேம நிதியத்திற்கு இழப்புக்களை ஏற்படுத்திய அவர்களின் வகிபாகத்திற்காக மாற்றல் செய்யப்பட்டிருக்கின்றனர் என ஆளுநர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டு உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.  

    ஆகவே, இலங்கை மத்திய வங்கி, பிழையான செய்தி அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த பிழையான தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்காக பின்வரும் விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

  • Monetary Policy Review - No. 3 of 2017

    As expected, the Colombo Consumer Price Index (CCPI, 2013=100) based headline inflation, decelerated on a year-on-year basis to 6.9 per cent in April 2017 from 7.3 per cent in March 2017, and CCPI based core inflation also decelerated to 6.8 per cent in April 2017 from 7.3 per cent recorded in the previous month. It is expected that inflation based on the National Consumer Price Index (NCPI, 2013=100), which edged up in March 2017, will also display a similar decline in April 2017. Supported by monetary policy adjustments from end 2015, inflation is projected to decelerate gradually to the desired mid-single digit levels by end 2017, although there could be some monthly fluctuations due to short term supply side disruptions and the base effects of tax revisions in 2016. 

  • Democratic Socialist Republic of Sri Lanka USD 1.5 billion International Sovereign Bond Offering

    இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் சார்பில், இலங்கை மத்திய வங்கி புதிய ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட 10 ஆண்டிற்கான பன்னாட்டு முறிகளை (முறிகள்) 2017 மே 04ஆம் நாளன்று வெற்றிகரமாக வழங்கியிருக்கிறது. முறிகளை மூடிஸ் இன்வெஸ்ட்டர் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேடிங் என்பன முறையே ‘B1’, ‘B+’ மற்றும் ‘B+’ இல் தரமிட்டிருக்கின்றன.

  • IMF Reaches Staff-Level Agreement on the Second Review of Sri Lanka’s Extended Fund Facility

    இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சம்ர்ப்பிக்கப்படும்.

  • External Sector Performance – January 2017

    2017இல் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினை எடுத்துக்காட்டியது. அதிகரித்த இறக்குமதிச் செலவினம், ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றின் விளைவாக இம்மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. எனினும், சுற்றுலாவிலிருந்தான வருவாய்களின் நியதிகளில் வெளிநாட்டு நாணயங்களின் பெறுகைகள் 2017 சனவரியில் ஒப்பீட்டு ரீதியில் உயர்ந்த வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் தொழிலாளர் பணவனுப்பல்கள், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மிதமான வீதமொன்றால் வளர்ச்சியடைந்தன. அரச பிணையங்கள் சந்தையும; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும; 2017 சனவரியில் தேறிய வெளிப்பாய்ச்சலைக் காட்டின.

    முழுவடிவம்

  • 'Central Bank Comes to You…' Open Day Programme conducted by the Central Bank of Sri Lanka

    இலங்கை மத்திய வங்கி “மத்திய வங்கி உங்களிடம் வருகின்றது” என்ற தலைப்பிலான அதன் முதலாவது முழுநாள் நிகழ்ச்சித்திட்டத்தினை 805, திருகோணமலை வீதி, மண்தண்டாவல, மாத்தளை என்ற முகவரியிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகத்தில் 2017 மே 5ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்றும் 6ஆம் நாள் சனிக்கிழமையன்றும் மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப. 8.00 மணிவரை நடத்தவுள்ளது. 

  • Transparency in Government Securities Market Further Improves

    இலங்கை மத்திய வங்கி 2017.04.26இல் அரச பிணையங்களின் மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல் வர்த்தகத்திற்கு முதனிலை வணிகர்களும் உரிமம் பெற்ற வங்கிகளும் பு;ம்பேர்க் இலத்திரனியல் முறி வர்த்தகப்படுத்தல் தளத்தினைப் பயன்படுத்த வேண்டுமென்பதனைக் கட்டாயமாக்கியிருக்கிறது. இதன்படி, அவர்கள்:

  • Amalgamation of the Operation of Regional Sub-office of the Central Bank of Sri Lanka in Jaffna with Regional Office in Kilinochchi

    யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச உப அலுவலகம் அதன் தொழிற்பாடுகளை 2017 யூன்15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அறிவியல் நகர், கிளிநொச்சியில் அமைந்துளள் பிரதேச அலுவலகத்திற்கு மாற்றியுள்ளது என்பதனை பொது மக்களுக்கு இத்தால் அறிவிக்கபப் டுகிறது. இதன்படி, ஊழியர் சேம நிதியத்துடன் தொடர்பான பணிகளை வழங்குதல், இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளுக்கான விற்பனைப் பீடத்தினை பேணுதல், நிதியியல், முகாமைத்துவ மற்றும் வியாபாரத்திறன்களின் அபிவிருத்தி போனற் வற்றின் மீதான விழிப்புணர்வுகளை நடத்துதல், யாழ்ப்பாண பிராந்தியத்தின் கொடுகடன் விநியோகப் பொறிமுறையினை  மேம்படுத்துதல் போன்ற யாழ் உப அலுவலகத்தினால் வழங்கப்படட் பணிகள் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தின் தற்போதைய அதன் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்படும்.

  • Licensed Banks Adopt Basel III Capital Standards to Strengthen Resilience

    2017 யூலை 01 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற வங்கிகள் 2016இன் பிற்பகுதியில் இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட பணிப்புரையினை அடிப்படையாகக் கொண்ட குறைந்தபட்ச மூலதன நியமங்களைப் பின்பற்றும். இப்பணிப்புரையானது வங்கிகளின் தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்தும் நோக்கில்  பன்னாட்டுத் தீர்ப்பனவுகளுக்கான வங்கியினால் விடுக்கப்பட்ட மூலதனம், முடுக்கி மற்றும் திரவத்தன்மை தொடர்பான பாசல் III வழிகாட்டல்களுடன் இசைந்ததாகக் காணப்பட்டது.

    முழுவடிவம்

Pages