இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவானது “பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் இணங்குவிப்பு கடப்பாடுகள் மற்றும் புதிய அபிவிருத்திகள்” பற்றி 2023 யூன் 26 அன்று உண்மைச் சொத்துத் துறைக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுசெய்தது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரும்ஃபணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் நந்தலால் வீரசிங்க தலைமை உரையினை நிகழ்த்தியதுடன் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு. டபிள்யு. எஸ். சத்யானந்த, நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எந்திரி. ஆர். எச். ருவினிஸ் மற்றும் உண்மைச் சொத்துத் துறையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி திரு. ஹார்டி ஜமால்தீன் ஆகியோரும் கூடியிருந்தவர்களுக்கு உரை நிகழ்த்திய அதேவேளை கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் திரு.
-
Real Estate Agents are Advised to Ramp up AML Measures
-
The Central Bank of Sri Lanka further reduces Policy Interest Rates
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 யூலை 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 11.00 சதவீதத்திற்கும் 12.00 சதவீதத்திற்கும் 200 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவான பணவீக்க வீழ்ச்சிச் செயல்முறை மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன உள்ளடங்கலாக தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் உன்னிப்பான பகுப்பாய்வொன்;றினைத் தொடர்ந்து சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டு பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதனை இயலுமைப்படுத்துவதனையும் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிநிலைப்படுத்தும் வேளையில் நிதியியல் சந்தைகளிலுள்ள அழுத்தங்களைத் தளர்த்துவதனையும் நோக்காகக் கொண்டது.
-
Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, பதிவுசெய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2023 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
-
CCPI based headline inflation recorded another sharp decline in June 2023
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 மேயின் 25.2 சதவீதத்திலிருந்து 2023 யூனில் 12.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஏப்பிறலில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.
-
External Sector Performance - May 2023
2023இன் இதுவரையிலான காலப்பகுதியில் ஓன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது தொடர்ந்தும் மிதமடைந்து காணப்பட்டது. வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 பெப்புருவரியிற்கு பின்னர் முதற் தடவையாக 2023 மேயில் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்து காணப்பட்டது.
தொழிலாளர் பணவனுப்பல்கள் 2023 மேயில் முன்னைய மாதத்திலும் பார்க்க உயர்வானதாக பதிவுசெய்யப்பட்டன. சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் பருவகால தாக்கங்கள் காரணமாக 2023 ஏப்பிறலிலும் பார்க்க குறைவாக காணப்பட்டபோதிலும் வலுவானதொரு வளர்ச்சியினைப் பதிவுசெய்தன.
2023 மே மாத காலப்பகுதியில் செலாவணி வீதத்தில் 8 சதவீதத்திலான குறிப்பிடத்தக்க உயர்வடைதலொன்று காணப்பட்டது.
2023 மே மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிடத்தக்களவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தான ஐ.அ.டொலர் 350 மில்லியன் பெறுகை மற்றும் சந்தையிலிருந்து மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுச் செலாவணியின் பாரிய தேறிய கொள்வனவுகள் என்பன மொத்த அலுவல்சார் ஒதுக்கு மட்டத்தை 2023 ஏப்பிறல் இறுதியில் காணப்பட்ட ஐ.அ.டொலர் 2.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் மே மாத இறுதியளவில் ஐ.அ.டொலர் 3.5 பில்லியனாக அதிகரித்தன.
-
Sri Lanka Purchasing Managers’ Index - May 2023
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 மேயில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலொன்றையும் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கமொன்றையும் எடுத்துக்காட்டின.
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 மேயில் குறைவான வேகத்திலேனும் வீழ்ச்சியடைந்து தயாரித்தல் நடவடிக்கைகளில் மாதத்திற்கு மாதம் சுருக்கமொன்றினை எடுத்துக்காட்டியது. அதற்கமைய, அனைத்து துணைச் சுட்டெண்களிலும் பதிவாகிய வீழ்ச்சிகள் மூலம் தூண்டப்பட்டு தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மேயில் 46.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது.
பணிகள் துறை கொ.மு.சுட்டெண், முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட சிறிதளவான வீழ்ச்சியின் பின்னர் 2023 மேயில் 53.5 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்து வளர்ச்சி எல்லைக்குத் திரும்பியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் மூலம் இது முன்னிலை வகித்திருந்தது. எவ்வாறிருப்பினும், தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள பணிகள் என்பன மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தன.
-
The Central Bank of Sri Lanka Relaxes its Monetary Policy Stance
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 மே 31ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 13.00 சதவீதத்திற்கும் 14.00 சதவீதத்திற்கும் 250 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவாக மெதுவடைகின்ற பணவீக்கம், பணவீக்க அழுத்தங்கள் படிப்படியாக இல்லாதொழிகின்றமை மறைவு மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகள் மேலும் நிலைநிறுத்தப்படுகின்றமை என்பவற்றுடன் இசைந்துசெல்லும் விதத்தில் நாணய நிலைமைகளை தளர்வடையச்செய்கின்ற நோக்குடன் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. இத்தகைய நாணயத் தளர்வடையச்செய்தலின் ஆரம்பமானது 2022இல் பதிவுசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் வரலாற்றுச் சுருக்கத்திலிருந்து பொருளாதாரம் மீளெழுச்சியடைவதற்கான உத்வேகமொன்றினை வழங்குகின்ற வேளையில் நிதியியல் சந்தைகளிலுள்ள அழுத்தங்களையும் தளர்வடையச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
-
External Sector Performance - April 2023
வர்த்தகப் பற்றாக்குறையானது மாதாந்த அடிப்படையிலான அதிகரிப்பொன்றினை தொடர்ந்து இரண்டாவது மாதமாக பதிவுசெய்தபோதிலும் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2023 ஏப்பிறலில் தொடர்ந்தும் மிதமடைந்து காணப்பட்டது.
தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் என்பன முன்னைய ஆண்டின் ஒத்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2023 ஏப்பிறலில் குறிப்பிடத்தக்களவு மேம்பட்டுக் காணப்பட்டன.
2023 மாச்சு முற்பகுதியில் தொடங்கிய செலாவணி வீதத்தின் குறிப்பிடத்தக்களவிலான உயர்வடைதலானது 2023 ஏப்பிறலிலும் தொடர்ந்தது.
அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.
உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து மத்திய வங்கியின் மூலமான வெளிநாட்டுச் செலாவணியின் தேறியளவிலான ஈர்த்தலுடன் 2023 ஏப்பிறல் இறுதியளவில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் மேலும் மேம்பட்டுக் காணப்பட்டன.
-
CCPI based headline inflation continued to record a sharp decline in May 2023
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 ஏப்பிறலின் 35.3 சதவீதத்திலிருந்து 2023 மேயில் 25.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஏப்பிறலில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - April 2023
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 ஏப்பிறலில் வீழ்ச்சியடைந்தன
பருவகால போக்குகளைத் தொடர்ந்து, 2023இன் ஏப்பிறலில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 34.7 ஆக குறைவடைந்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் மாதத்திற்கு மாத சுருக்கமொன்றை எடுத்துக்காட்டியது. அதற்கமைய, உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்கள் மாச்சில் காணப்பட்ட பருவகால உச்சத்துடன் ஒப்பிடுகையில் ஏப்பிறலில் வீழ்ச்சியடைந்தன.
பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 ஏப்பிறலில் 49.6 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்து நடுநிலையான அடிப்படை அளவிற்கு சற்று கீழே காணப்பட்டது. புதிய வியாபாரங்கள், தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள பணிகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிகளால் இது தூண்டப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும், தொழில் நடவடிக்கைகளும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகளும் மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் அதிகரித்தன.