• CCPI based Inflation decreased to 3.9 per cent in April 2021

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 மாச்சின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த வீழ்ச்சிகள் மூலம் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மாச்சின் 9.6 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 9.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலில் 1.8 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மாச்சின் 4.0 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 3.9 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

  • The Central Bank of Sri Lanka Releases its Annual Report for the Year 2020

    1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின்படி இலங்கை மத்திய வங்கி நாணயச்சபையின் எழுபத்தோராவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமானிய பேராசிரியர் டபிள்யு. டி. லக்~;மன் அவர்களால் இலங்கையின் பிரதம அமைச்சரும் நிதி அமைச்சருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்~ அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

  • Revised Regulations Issued Under the Foreign Exchange Act, No.12 of 2017

    மிகவும் வசதியாக வியாபாரம் செய்வதனூடாக ஆர்வலர்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வசதிப்படுத்துவதுடன் இணைந்து எல்லை கடந்த வெளிநாட்டு செலாவணிக் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதில் அதிக வினைத்திறனை அடையும் நோக்குடன் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மேலும் எளிதாக்கி தெளிவினை மேம்படுத்துவதற்காக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

    மேலே எடுத்துக்காட்டப்பட்டவாறு இத்திருத்தப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிக் கொள்கைக் கட்டமைப்பானது 2021 மாச்சு 22ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவற்றிற்கு மத்தியில் அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு

  • NCPI based Inflation increased in March 2021

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2021 பெப்புருவரியின் 4.2 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 5.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2020 மாச்சில் நிலவிய குறைவான தளப் புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 பெப்புருவரியின் 6.9 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 8.8 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 பெப்புருவரியின் 1.9 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 2.0 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

    ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 பெப்புருவரியின் 5.5 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 5.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

  • External Sector Performance - February 2021

    ஏற்றுமதிகள் உலகளாவிய நோய்தொற்றிற்கு முன்னைய மட்டங்களுக்கு அதிகரித்தமை, தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு, மற்றும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஒப்பீட்டு ரீதியில் காணப்பட்ட உறுதியானதன்மை என்பன 2021 பெப்புருவரியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறைக்கு ஆதரவளித்தன. 2021 பெப்புருவரியில் வர்த்தகப் பற்றாக்குறை ஓராண்டிற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட அதேமட்டத்தில் பெருமளவிற்கு மாற்றமெதுவுமின்றிக் காணப்பட்டது. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இரண்டிலுமுள்ள வெளிநாட்டு முதலீடுகள் 2021 பெப்புருவரியில் தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தன. 2020 யூலையில் இந்திய றிசேர்வ் வங்கியிலிருந்து பெறப்பட்ட ஐ.அ.டொலர் 400 மில்லியன் கொண்ட சார்க் பினான்ஸ் நிதியின் பரஸ்பர பரிமாற்றல் வசதி முதிர்ச்சியடைந்தமையினைத் தொடர்ந்து 2021 பெப்புருவரியில் மீளச்செலுத்தப்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கான தேறிய உட்பாய்ச்சல்கள் இம்மாத காலப்பகுதியில் செலாவணி வீதத்தின் மீதான அழுத்தத்தினைத் தளர்த்தியதுடன், ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள் மத்திய வங்கி மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதற்கு தேறிய அடிப்படையில் வெளிநாட்டுச் செலாவணியினை ஈர்த்துக்கொள்வதனை இயலுமைப்படுத்தின.

  • Introduction of a Regulatory Framework to Facilitate Foreign Currency Borrowings by Licensed Finance Companies

    உரிமம்பெற்ற நிதிக் கமபனிகளுக்கு அவற்றின் வியாபார விரிவாக்கங்களுக்கு ஆதரவளிக்கின்ற விதத்தில் வெளிநாட்டு மூலங்களிலிருந்து குறைந்த செலவில் நிதியிடலைப் பெற்றுக்கொள்வதற்கான நெகிழ்ச்சித்தன்மையினை வழங்கும் நோக்குடன் 2021 ஏப்பிறல் 9ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினால் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் மீது பணிப்புரைகளை விடுத்திருக்கிறது. இப்பணிப்புரைகளின் நோக்கங்கள் யாதெனில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் வெளிநாட்டு நிதியிடல் வெளிப்படுத்துகைகளினால் உருவாக்கப்படும் ஏதேனும் நிதியியல் தளம்பல்களை உறுதிப்படுத்துவதும் அத்தகைய வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளுக்கான இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பினை வழங்குவதுமேயாகும்.

  • Repatriation of Export Proceeds into Sri Lanka

    பொருட்களின்ஏற்றுமதியாளர்களால்மேற்கொள்ளப்பட்டகோரிக்கைகளைநாணயச்சபைகருத்திற்கொண்டு, 2021.03.09ஆம்திகதியிடப்பட்ட

  • Sri Lanka Purchasing Managers’ Index - March 2021

    மாச்சில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் விரிவடைந்தன. நாட்டில் தயாரிப்பு நடவடிக்கைகளில் காணப்பட்ட வலுவான மீளெழுச்சியை எடுத்துக்காட்டுகின்ற விதத்தில் 2021 மாச்சில் தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஒன்பது மாதங்களிலேயே மிக உயர்ந்த அளவான 67.0 இனை அடைந்தது. 2021 மாச்சில் பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 62.1 சதவீதத்தினால் உயர்வடைந்து பணிகள் துறை தொடர்ந்து நான்கு மாதங்களாக விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டியது.

    முழுவடிவம்

  • Suspension of Business of 'Swarnamahal Financial Services PLC'

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, (நாணயச் சபை) 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறது.

  • Payment of Additional Compensation under the Sri Lanka Deposit Insurance and Liquidity Support Scheme

    இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவுத் திட்டத்தின் கீழ் மேலதிக நட்டஈட்டுக் கொடுப்பனவு ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு 2021.04.12ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படும் என்பதை இலங்கை மத்திய வங்கி, த பினான்ஸ் பிஎல்சியின் வைப்பாளர்களுக்கு/ சட்டபூர்வமான பயன்பெறுநர்களுக்கு அறியத்தருகின்றது.

Pages