• Revocation of the money changing permit issued to Prasanna Money Exchange (Pvt) Ltd

    2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் (சட்டம்) 11 (3)ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, இல.42A, முதலிகே மாவத்தை, கொழும்பு 01 மற்றும் இல.57, காலி வீதி கொழும்பு 06 என்ற முகவரிகளில் முறையே அதன் தலைமை அலுவலகத்திலும் கிளையிலும் நாணய மாற்று தொழிலில் ஈடுபடுவதற்கு பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தின் தற்காலிக இடைநிறுத்தலைத் தொடர்ந்து, கம்பனி மூலம் புரியப்பட்ட இணங்காமைகள் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொண்டதன் பின்னர், பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கிய DFE/RD/0058 ஆம் இலக்க அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாக இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.  

  • External Sector Performance – October 2022

    ஆடை ஏற்றுமதிகளின் குறைந்தளவிலான வருவாய்களின் காரணமாக வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 மாச்சிலிருந்து முதற்தடவையாக ஆண்டிற்காண்டு அடிப்படையில் 2022 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. இறக்குமதிச் செலவினமானது 2022 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்திருந்தபோதிலும் இறக்குமதிச் செலவினத்தின் வீழ்ச்சி தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக 2022 ஒத்தோபரில் (ஆண்டிற்காண்டு) தொடர்ந்தது. வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஒத்தோபரில் குறிப்பிடத்தக்கதொரு சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. அதேவேளை, 2022 ஒத்தோபரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் நிலையாகக் காணப்பட்டதுடன் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் மேம்பட்டன. 2022 சனவரி தொடக்கம் ஒத்தோபர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்ட அதேவேளையில், தொழிலாளர் பணவனுப்பல்கள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3 பில்லியனை அண்மித்தும் காணப்பட்டன. அரச பிணையங்கள் சந்தையிலும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடு 2022 ஒத்தோபர் காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது. மத்திய வங்கி அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிக்கும் பொருட்டு வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையைத் தொடர்ந்தும் வழங்கியமையானது மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் திரவ மட்டத்தினைக் குறைவடையச் செய்துள்ளது. அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 363 ரூபாவாகத் தொடர்ந்தும் காணப்பட்டது.

  • CCPI based headline inflation decreased for the second consecutive month in November 2022

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஒத்தோபரின் 66.0 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 61.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.  அதையொத்த போக்கினைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஒத்தோபரின் 85.6 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 73.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த, அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஒத்தோபரின் 56.3 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 54.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

  • The Central Bank of Sri Lanka maintains policy interest rates at their current levels

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 நவெம்பர் 23ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றினைக் பரிசீலனையிற்கொண்ட பின்னர் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பொருளாதாரத்தில் கேள்வியினால் உந்தப்பட்ட ஏதேனும் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இறுக்கமான நாணயக்கொள்கை நிலையினைப் பேணுவது அவசியமானதாயமைகின்ற வேளையில் பணவீக்க வீழ்ச்சி எதிர்பார்க்கைகளை மேலும் வலுப்படுத்தத் துணைபுரிந்து அதன்மூலம் முதன்மைப் பணவீக்கத்தினை நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத மட்டத்திற்கு வழிநடத்துவதனை இயலச்செய்யுமென சபை குறித்துக்காட்டியது.

  • NCPI based headline inflation decelerated to 70.6% in October 2022 on year-on-year basis reversing its increasing trend observed since October 2021

    2021 ஒத்தோபரிலிருந்து அதிகரிக்கின்ற போக்கில் தொடர்ந்து சென்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 செத்தெம்பரின் 73.7 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 70.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பரின் 85.8 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 80.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பரின் 62.8 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 61.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

  • SL Purchasing Managers’ Index (PMI) – October 2022

    தயாரிப்பு நடவடிக்கைகளில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டி, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2022 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், அனைத்து துணைச் சுட்டெண்களிலும் பதிவாகிய வீழ்ச்சிகளால் தூண்டப்பட்டு முன்னைய மாதத்திலிருந்து 4.2 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியுடன் 2022 ஒத்தோபரில் 38.4 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. 

    பணிகள் கொ.மு.சுட்டெண், 2022 ஒத்தோபரில் 47.9 சுட்டெண் பெறுமதிக்கு நடுநிலையான அடிப்படை அளவிற்குக் கீழ் வீழ்ச்சியடைந்தது. புதிய வியாபாரங்கள், தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள பணி என்பவற்றில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிகள் இதற்குக் காரணமாக அமைந்தன. எவ்வாறிருப்பினும், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் என்பன மாதகாலப்பகுதியில் அதன் அதிகரிக்கின்ற உத்வேகத்துடன் தொடர்ந்தன.    

  • Release of “Sri Lanka Socio Economic Data – 2022” Publication

    இலங்கை மத்திய வங்கியினால் வருடாந்தம் வெளியிடப்படும் தரவுகளை உள்ளடக்குகின்ற கையேடான “இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவுகள் – 2022” பொதுமக்களின் தகவலுக்காக தற்போது கிடைக்கப்பெறுகின்றது. தற்போதைய தரவுகள் கையேடானது தொடரின் 45ஆவது தொகுதியாகும்.

  • The Central Bank publishes 'Recent Economic Developments: Highlights of 2022 and Prospects for 2023'

    இலங்கை மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2022இன் முக்கிய பண்புகளும் 2023இற்கான வாய்ப்புக்களும்” இனை இன்று வெளியிட்டுள்ளது. இவ்வெளியீட்டினை மத்திய வங்கியின் இணையத்தளத்தினூடாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

  • External Sector Performance - September 2022

    2022 செத்தெம்பரில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள்  தொடர்ந்தும் வலுவடைந்த அதேவேளையில், உணவல்லா நுகர்வுப் பொருட்கள் மற்றும் முதலீட்டுப் பொருட்கள் என்பவற்றின் இறக்குமதிகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினைப் பிரதிபலிக்கும் வகையில் இறக்குமதிச் செலவினம் தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக, வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 செத்தெம்பரில் (ஆண்டிற்காண்டு) குறிப்பிடத்தக்கதொரு சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 செத்தெம்பரில் சிறிதளவில் அதிகரித்துக் காணப்பட்டன (ஆண்டிற்காண்டு), சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் 2021 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் 2022இன் அதே காலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. அரச பிணையங்கள் சந்தையிலும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடு 2022 செத்தெம்பர் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது.

  • CCPI based headline inflation recorded 66.0% in October 2022, reversing its continued increasing trend observed since October 2021

    2021 ஒத்தோபர் தொடக்கம் அதிகரித்த போக்கில் சென்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 செத்தெம்பரின் 69.8 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 66.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.  அதையொத்த போக்கினைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 செத்தெம்பரின் 94.9 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 85.6 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பரின் 57.6 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 56.3 சதவீதத்திற்கு குறைவடைந்தது.

Pages