• Regulations on Financial Consumer Protection

    இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதியியல் நிறுவனங்கள் மூலம் பணிகளை வழங்கும் போது நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பை நிறுவனமயப்படுத்துவதற்கான தேவையை இனங்கண்டு, இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதை இலக்காகக்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் அனைத்தையுமுள்ளடக்கிய புதிய ஒழுங்குவிதிகளைக் கொண்ட தொகுதியொன்றை உருவாக்கியுள்ளது.

  • The Central Bank of Sri Lanka issues a Coin to mark the 75th Independence Celebration of Sri Lanka

    இலங்கை மத்திய வங்கியானது 2023.02.04 அன்று இடம்பெறவுள்ள நாட்டின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை குறிக்கும் முகமாக ரூ.1000 நாணய வகை சுற்றோட்டம் செய்யப்படாத ஞாபகார்த்தக் குற்றியொன்றை வெளியிட்டுள்ளது. இது, இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படும் 71ஆவது ஞாபகார்த்தக் குற்றியாகும். குற்றி பற்றிய விரிவான விபரணங்களும் விபரக்குறிப்புக்களும் கீழே தரப்பட்டுள்ளன.

  • External Sector Performance - December 2022

    ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022இல் முதற் தடவையாக ஆண்டொன்றிற்கு ஐ.அ.டொலர் 13 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டு, 2021இல் பதிவுசெய்யப்பட்ட முன்னைய உயர்ந்தளவிலான பெறுமதியிலிருந்து 4.9 சதவீத அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. இம்மேம்பாடானது ஆடைகள், இரத்தினக்கற்கள், வைரங்கள் மற்றும் ஆபரணங்கள், பொறி மற்றும் பொறியியல் சாதனங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகள் என்பன உள்ளடங்கலாக கைத்தொழில் ஏற்றுமதிகளிலிருந்ததான அதிகரித்த வருவாய்களின் பெறுபேறாகும். அதேவேளை, அவசரமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் 2022இன் பெரும்பாலான காலப்பகுதியில் சந்தையில் நிலவிய திரவத்தன்மை கட்டுப்பாடுகள் என்பவற்றின் விளைவாக மொத்த இறக்குமதிச் செலவினம் 2022இல் ஐ.அ.டொலர் 18,291 மில்லியனாக விளங்கி 11.4 சதவீத ஆண்டிற்காண்டு வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. இதன் விளைவாக, 2022இல் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறையானது 2021இல் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 8,139 மில்லியனிலிருந்து 2010இலிருந்தான தாழ்ந்த மட்டமான ஐ.அ.டொலர் 5,185 மில்லியனிற்கு சுருக்கமடைந்தது. ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையின் வீழ்ச்சிக்குப் பங்களித்த முக்கிய காரணிகள் வரைபடம் 1 இல் காட்டப்பட்டுள்ளன.

  • CCPI based headline inflation eased further in January 2023

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 திசெம்பரின் 57.2 சதவீதத்திலிருந்து 2023 சனவரியில் 54.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, 2023 சனவரியில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வேகக்குறைவுப் பாதைக்கு இசைவாக பரந்தளவில் காணப்படுகின்றது. 

  • The Central Bank of Sri Lanka Maintains Policy Interest Rates at their Current Levels

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 சனவரி 24ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப்பொருளாதார பக்கங்களின் மீதான அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் மற்றும் எறிவுகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நாணய நிலைமைகள் தொடர்ந்தும் போதியளவில் இறுக்கமாகக் காணப்படுவதனை நிச்சயப்படுத்துவதற்கு தற்போதுள்ள இறுக்கமான நாணயக்கொள்கை நிலையினைப் பேணுவதானது அவசியமானதென சபை அபிப்பிராயப்பட்டது. இறுக்கமான இறைக் கொள்கையுடன் இணைந்து இத்தகைய இறுக்கமான நாணய நிலைமைகள் பணவீக்க எதிர்பார்க்கைகளை கீழ்நோக்கி சீராக்கம் செய்து, பணவீக்க வீதங்களை 2023 இறுதியளவில் விரும்பத்தக்க மட்டங்களிற்கு மத்திய வங்கி கொண்டுவருவதனை இயலச்செய்வதுடன் அதன்மூலம் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டினை நடுத்தர காலத்தில் மீட்டெடுக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  • NCPI based headline inflation decreased further in December 2022

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 நவெம்பரின் 65.0 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 59.2 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 நவெம்பரின் 69.8 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 59.3 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 நவெம்பரின் 60.4 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 59.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

  • Sri Lanka Purchasing Managers’ Index - December 2022

    2022 திசெம்பரில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் தயாரித்தல் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினையும் எடுத்துக்காட்டின.

    தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், திசெம்பரில் 44.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினை எடுத்துக்காட்டியது. நிரம்பலர் விநியோக நேரம் தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றத்தினால் இப்பின்னடைவு தூண்டப்பட்டிருந்தது.   

    பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக வீழ்ச்சியடைந்ததன் பின்னர் 2022 திசெம்பரில் 51.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து வளர்ச்சி எல்லைக்குத் திரும்பியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைத் துறைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகள் மூலம் இவ்வதிகரிப்பு துணையளிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள பணிகள் என்பன மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தன.

  • External Sector Performance - November 2022

    வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 நவெம்பரில் விரிவடைந்து காணப்பட்டபோதிலும் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் தாழ்ந்தளவிலேயே காணப்பட்டது. தாழ்ந்தளவிலான உலகளாவிய கேள்வியின் காரணமாக, குறிப்பாக ஆடை ஏற்றுமதிகளுக்கான கேள்வி, வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 நவெம்பரில் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, வணிகப்பொருள் இறக்குமதிச் செலவினமும் 2022 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தபோதும் 2022 நவெம்பரில் தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக ஆண்டிற்காண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்களானது 2022 நவெம்பரிலும் மீளெழுச்சியைத் தொடர்ந்ததுடன் முன்னைய ஆண்டு மற்றும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக் காணப்பட்டது. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 நவெம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் காணப்பட்ட 40 சதவீத வளர்ச்சியால் துணையளிக்கப்பட்டு சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் அதிகரித்துக் காணப்பட்டன. அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 நவெம்பர் காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளையில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை 2022 நவெம்பர் காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது. மத்திய வங்கி அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிக்கும் பொருட்டு வெளிநாட்டுச் செலாவணித் தேவைப்பாட்டினைத் தொடர்ந்து வழங்கியது. அதன் விளைவாக, மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புதல் மட்டுப்படுத்தப்பட்டு காணப்பட்டது. அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 363 ரூபாவாகத் தொடர்ந்தும் காணப்பட்டது.

  • The Central Bank of Sri Lanka Introduces Measures to Reduce the Overdependence on the Standing Facilities

    2022இன் முதலரைப்பகுதியில் கணிசமானளவு உயர்வாகவிருந்த உள்நாட்டு பணச் சந்தையின் திரவத்தன்மைப் பற்றாக்குறையானது 2022இன் பிற்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. எனினும், பணச் சந்தை திரவத்தன்மை நிலைமைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பகுதியளவில் உள்நாட்டு பணச் சந்தைகளின் செயற்பாடு குறைவாக இருந்ததன் காரணமாக சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்வாக காணப்பட்டது. அதேவேளை, பல்வேறு உரிமம்பெற்ற வங்கிகள் அவற்றின் கட்டமைப்புசார் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சந்தை அடிப்படையிலான நிதியிடல் தெரிவுகளைக் கருத்திற்கொள்ளாது மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் ஓரிரவு துணைநில் வசதிகள் மீது தொடர்ந்தும் மிதமிஞ்சியளவு தங்கியிருக்கின்றன என்று அவதானிக்கப்பட்டுள்ளது.

  • Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2023 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

Pages