தயாரிப்பு நடவடிக்கைகளில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டி, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2022 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், அனைத்து துணைச் சுட்டெண்களிலும் பதிவாகிய வீழ்ச்சிகளால் தூண்டப்பட்டு முன்னைய மாதத்திலிருந்து 4.2 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியுடன் 2022 ஒத்தோபரில் 38.4 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது.
பணிகள் கொ.மு.சுட்டெண், 2022 ஒத்தோபரில் 47.9 சுட்டெண் பெறுமதிக்கு நடுநிலையான அடிப்படை அளவிற்குக் கீழ் வீழ்ச்சியடைந்தது. புதிய வியாபாரங்கள், தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள பணி என்பவற்றில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிகள் இதற்குக் காரணமாக அமைந்தன. எவ்வாறிருப்பினும், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் என்பன மாதகாலப்பகுதியில் அதன் அதிகரிக்கின்ற உத்வேகத்துடன் தொடர்ந்தன.









கௌரவ நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் நாணயச் சபையானது உதவி ஆளுநரும் நாணயச் சபைக்கான செயலாளருமான திருமதி. கே. எம். ஏ. என். டவுளுகல அவர்களை 2022 ஒத்தோபர் 07ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு பதவியுயர்த்தியுள்ளது.