• External Sector Performance - March 2024

    ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மேம்பாடொன்றினால் ஆதரவளிக்கப்பட்டு வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 மாச்சில் சுருக்கமடைந்ததுடன் (ஆண்டிற்காண்டு அடிப்படையில்) இது 2022 ஓகத்திலிருந்து பதிவுசெய்யப்பட்ட உயர்ந்தளவிலான வருவாய்களாகக் காணப்பட்டது.

    பணிகள் துறையும் சுற்றுலாத் துறையினால் முக்கியமாகப் பங்களிக்கப்பட்டு 2024 மாச்சில் குறிப்பிடத்தக்க தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளையில் கடல் போக்குவரத்து (சரக்கு) பணிகள் நியதிகளிலும் கணிசமானளவிலான உட்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டன.

    பருவகாலப் போக்குடன் இசைந்து செல்லும் விதத்தில் தொழிலாளர் பணவனுப்பல்கள்; 2024 மாச்சில் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டன.

  • CCPI based headline inflation showed some uptick in April 2024

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 மாச்சின் 0.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஏப்பிறலில் 1.5 சதவீதமாகப் பதிவாகி சிறு அதிகரிப்பொன்றினைக் காண்பித்தது.

  • SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – March 2024

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 55.9 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு மாச்சில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் இச்சுட்டெண் காணப்படுகின்ற தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இது விளங்கி, கட்டடவாக்க நடவடிக்கைகளில் நிலையான மேம்படுதலைக் குறித்துக்காட்டுகின்றது.

  • The Central Bank of Sri Lanka hosted the FSB RCG Asia Meeting in Colombo on 29 April 2024

    ஆசியாவிற்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை பிராந்திய ஆலோசனைக் குழு 2023.04.29 அன்று கொழும்பில் கூடியது. உன்னிப்பான கண்காணிப்பைத் தேவைப்படுத்திய அண்மைக்கால நிதியியல் அபிவிருத்திகள் மற்றும் பாதிக்கப்படும்தன்மைகளை இக்கலந்துரையாடல்கள் மையப்படுத்தியிருந்தன. அதற்கமைய, பிராந்தியம் முழுவதும் கிறிப்டோ-சொத்துச் செயற்பாடுகளுக்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பின் நடைமுறைப்படுத்தலை ஊக்குவிப்பதற்கான வழிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அண்மைக்கால முன்னேற்றங்கள், நிதியியல் துறையில் அதன் வளர்ச்சியடைகின்ற உபயோகம் அத்துடன் நிதியியல் உறுதிப்பாட்டிற்கான அதன் உள்ளார்த்தங்கள் என்பவற்றைக் குழு கலந்துரையாடியது.

  • The Central Bank of Sri Lanka releases its inaugural Annual Economic Review and Financial Statements and Operations of the Central Bank for the Year 2023

    2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 80இன் கீழான 2023ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 99இன் கீழான 2023ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் எனும் தொடக்க வெளியீடுகள் சனாதிபதியும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி நந்தலால் வீரசிங்க அவர்களினால் இன்று (2024 ஏப்பிறல் 25) கையளிக்கப்பட்டன.

  • Sri Lanka Purchasing Managers’ Index (Manufacturing and Services) - March 2024

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 மாச்சில் தயாரித்தல் மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றன.

    தயாரித்தலுக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரித்தல்)இ 2024 மாச்சில் 62.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்துஇ தயாரித்தல் நடவடிக்கைகளில் விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. மூன்று ஆண்டுகளில் பதிவாகியிருந்த அதிகூடிய தயாரித்தல் கொ.மு.சுட்டெண்ணை இது குறிக்கின்றது. கேள்வியினால் பிரதானமாகத் தூண்டப்பட்டுஇ அனைத்து துணைச் சுட்டெண்களும்  மாதத்திற்கு மாதம் அடிப்படையில் விரிவடைந்தமை இவ்வதிகரிப்பிற்கு பருவகால பங்களித்தன.  

  • Central Bank Issues Guidelines for the Establishment of Business Revival Units in Licensed Banks to Support Revival of Viable Businesses

    ஏற்கனவே தாபிக்கப்பட்ட கொவிட்-19 நோய்த்தொற்றுக்குப் பிந்திய புத்துயிரளித்தல் பிரிவுகளின் தொழிற்பாடுகளை மேலும் வலுப்படுத்தி, அத்தகைய பிரிவுகளை வியாபார புத்துயிரளித்தல் பிரிவுகள் ஆக வடிவமைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி 2024 மாச்சு 28 அன்று உரிமம்பெற்ற வங்கிகளுக்கு விரிவான வழிகாட்டலை வழங்கியுள்ளது. முன்மொழியப்பட்ட வியாபார புத்துயிரளித்தல் பிரிவுகளின் மேம்படுத்தப்பட்ட நோக்கெல்லையானது அசாதாரண பேரண்டப்பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட வளம்பெறத்தக்க வியாபாரங்களுக்கென நிலைபேறான புத்துயிரளித்தலை வசதிப்படுத்தி உரிமம்பெற்ற வங்கிகளின் அதிகரித்த சேதமிழந்த சொத்துக்களை முறையாகக் கையாளுவதை உறுதிசெய்யும். இவ்வழிகாட்டல்களை வகுக்கின்றபோது மத்திய வங்கியானது வங்கித் தொழில்துறை மற்றும் வர்த்தக சம்மேளனம் அடங்கலாக தொடர்புடைய ஆர்வலர்களின் கருத்துக்களையும் கோரியது.

  • CCPI based headline inflation decelerated sharply in March 2024

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 பெப்புருவரியின் 5.9 சதவீதத்திலிருந்து 2024 மாச்சில் 0.9   சதவீதத்திற்கு சடுதியாக சரிவடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இச்சரிவானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின்  எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது.

  • SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – February 2024

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண், 57.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 பெப்புருவரியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. தற்போதைய ஆக்கபூர்வமான சூழலும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பல கருத்திட்டங்கள் மீளத்தொடங்கியமையும் கட்டடவாக்க நடவடிக்கைகளில் வளர்ச்சிக்கு காரணமாகவிருந்தன என பல  நிறுவனங்கள் குறிப்பிட்டன.

  • External Sector Performance - February 2024

    இறக்குமதிச் செலவினம் மற்றும் ஏற்றுமதி வருவாய்கள் ஆகிய இரண்டும் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2024 பெப்புருவரியில் அதிகரித்தன. இருப்பினும், இறக்குமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பானது ஏற்றுமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டமையினால் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. மேலும், இறக்குமதிச் செலவினமானது தாழ்ந்தளவிலான எரிபொருள் இறக்குமதி காரணமாக முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்புருவரியில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

    சுற்றுலாத்துறை, கடல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, மற்றும் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம்ஃவெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளலுடன் தொடர்புடைய பணிகள் என்பவற்றிலிருந்தான வருவாய்களின் நியதிகளில் பணிகள் துறை குறிப்பிடத்தக்களவிலான தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தது.

    தொழிலாளர் பணவனுப்பல்கள்; ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2024 பெப்புருவரி மாதத்திலும் மேம்பாடுகளைத் தொடர்ந்தும் பதிவுசெய்தன.

Pages