தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் ஒத்தோபரில் சுருக்கமடைந்தன
ஒத்தோபரின் ஆரம்ப பகுதியில் நாட்டில் தோன்றிய கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் பாதகமான தாக்கங்களின் காரணமாக தயாரிப்பு நடவடிக்கைகள் 2020 ஒத்தோபரில் மந்தமான செயலாற்றத்தினை எடுத்துக்காட்டின. இதற்கமைய, தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணானது குறிப்பாக அணியும் ஆடைகள், உணவு மற்றும் குடிபானத் துறைகளில் உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை மற்றும் கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண்களின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியுடன் 2020 ஒத்தோபரில் 40.3 இற்கு வீழ்ச்சியடைந்தது.