Ministry of Finance (MoF) has extended the closing date for the submission of Request for Proposals (RFP) for the Foreign Currency Term Financing Facility for the Government of Sri Lanka 2021. The links in the MoF website and the External Resources Department (ERD) website are as follows:
-
Government of Sri Lanka has extended the deadline for Request for Proposals (RFPs) for the Foreign Currency Term Financing Facility
-
NCPI based Inflation decreased in August 2021
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூலையில் 6.8 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 6.7 சதவீதத்திற்கு சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சி முற்றிலும் 2020 ஓகத்தில் நிலவிய உயர் தளத்தின் புள்ளிவிபர விளைவு காரணமாகவே வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம், 2021 யூலையில் 11.0 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 11.1 சதவீதத்திற்கு சிறிதளவில் அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம், 2021 யூலையில் 3.2 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 3.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 யூலையில் 5.4 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 5.5 சதவீதத்திற்கு சிறிதளவில் அதிகரித்தது.
-
Appointment of new Secretary to the Monetary Board of the Central Bank of Sri Lanka
2021 செத்தெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் நாணயச் சபையின் செயலாளராக உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பதனை இலங்கை மத்திய வங்கி மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது.
உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக முதுமானிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரயோகப் புள்ளிவிபரவியலில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டத்தினையும் விஞ்ஞானமானி (பௌதீக விஞ்ஞானம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் (CIMA) சக உறுப்பினரும் இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களின் (CMA) இணை உறுப்பினருமாவார்.
-
Sri Lanka Purchasing Managers’ Index - August 2021
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2021 ஓகத்தில் சுருக்கமடைந்தன.
2021 ஓகத்தில் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று மீளெழுச்சி பெற்றமை நாட்டின் தயாரிப்பு நடவடிக்கைகளை மெதுவடையச் செய்துள்ளது. அதற்கமைய, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது முன்னைய மாதத்திலிருந்து 12.7 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியுடன் 2021 ஓகத்தில் 45.1 சுட்டெண் பெறுமதியொன்றினை பதிவுசெய்து இது, புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்களில் காணப்பட்ட வீழ்ச்சியின் மூலம் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்து.
கொவிட்-19 மேலும் பரவுவதனைக் கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மூலம் பணிகள் கொ.மு.சுட்டெண் 2021 ஓகத்தில் 46.2 இனைக் கொண்ட சுட்டெண் பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்து. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கை, தொழில் நிலை, நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்கள் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்தன.
-
Mr. Ajith Nivard Cabraal Takes Office as the Governor of the Central Bank of Sri Lanka
இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக திரு. அஜித் நிவாட் கப்ரால் 2021 செத்தெம்பர் 15, புதன்கிழமை அன்று கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டது. அதற்கமைய, திரு. கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகத் தொழிற்படுவார்.
-
Initial statement by Governor Ajith Nivard Cabraal upon taking office on the 15th September 2021
மத்திய வங்கியினை மீண்டுமொரு முறை வழிநடாத்துவதனைப் பெரும் ஆசிர்வாதமாகக் கருதுவதுடன் இப்பொறுப்பினை ஏற்பதில் சனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினையும் உறுதிப்பாட்டினையும் மிகவும் தாழ்மையுடன் நினைவு கூறுகின்றேன். ஆயிரக்கணக்கான எமது நாட்டு மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நல்வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களது எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்படாது எனவும் பொருளாதாரம் தொடர்ந்து உறுதிப்பாட்டினை நோக்கி வழிநடத்தப்படும் எனவும் நான் அவர்களுக்கு உத்தரவாதமளிக்கின்றேன்.
மத்திய வங்கியில் உள்ள சிறந்த ஆளணியின் நெருக்கமான ஒத்துழைப்பினையும் அனைத்து ஆர்வலர்களிடமிருந்தும் ஆதரவையும் எதிர்பார்ப்பதோடு நான் அவர்களுடன் ஆரம்ப கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவுள்ளேன்.
-
External Sector Performance - July 2021
வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2021 யூலையில் விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்தது. ஏற்றுமதிப் பொருட்களிலிருந்தான வருவாய்கள் ஓராண்டிற்கு முன்னைய காலப்பகுதியிலும் பார்க்க இம்மாத காலப்பகுதியில் அதிகரித்திருந்தாலும், இறக்குமதிகள் மீதான செலவினம் வேகமாக அதிகரித்தமையானது வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக 2021 யூலையில் விரிவடையக் காரணமாக அமைந்தது. 2021 யூனில் அவதானிக்கப்பட்ட போக்கினைத் தொடர்ந்து யூலையிலும் தொழிலாளர் பணவனுப்பல்கள்; வீழ்ச்சியடைந்த வேளையில், சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் குறைந்தளவான மட்டங்களிலேயே காணப்பட்டன. அதேவேளை, படுகடன் பணிக் கொடுப்பனவுகளில் நாட்டின் அப்பழுக்கற்ற பதிவினைப் பேணி, இலங்கை 2021 யூலையில் ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட முதிர்ச்சியடைந்த 10 வருட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வெற்றிகரமாகத் தீர்ப்பனவு செய்தது.
-
Margin Deposit Requirement against the Importation of Selected Non-Essential/Non-Urgent Goods made under Letters of Credit and Documents against Acceptance Terms with Licensed Commercial Banks and National Savings Bank
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2021 செத்தெம்பர் 08 அன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற/ அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கெதிராக 100 சதவீத காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கான தீர்மானம், குறிப்பாக, ஊகவியாபாரத் தன்மையிலான மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கமிழக்கச்செய்வதன் வாயிலாக செலாவணி வீத உறுதிப்பாட்டினையும் வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத்தன்மையினையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்குத் துணையளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
காசு எல்லை வைப்புத் தேவைப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள உற்பத்தி வகைகளின் தொகுப்பு 2019, 2020 மற்றும் 2021 இன் இதுவரையிலும் (தற்காலிகமானவை) ஒவ்வொரு வகையின் கீழுமான இறக்குமதிச் செலவினம் பற்றிய தகவல்களுடன் சேர்த்து கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
-
Concessions Further Extended for Businesses and Individuals Affected by COVID-19
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் புதிய தோற்றம் மற்றும் அதன் காரணமாக கடன்பாட்டாளர்களுக்கேற்பட்ட இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கு 2021.12.31 வரை ஏற்கனவே (2021.08.31 வரை) வழங்கப்பட்ட சலுகைகளை நீடிப்பதனை பரிசீலனையில் கொள்ளுமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) இலங்கை மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளதாக பொதுமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது. உரிமம்பெற்ற வங்கிகள் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் வழங்குகின்ற மேலதிகச் சலுகைகள் இலங்கை மத்திய வங்கியால் குறிப்பிடப்பட்ட நன்மைகளிலும் பார்க்க குறையாத விதத்தில் ஒட்டுமொத்த நன்மைகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
-
Government of Sri Lanka calls for Request for Proposals for the Foreign Currency Term Financing Facility
இலங்கை அரசாங்கத்திற்கான வெளிநாட்டு நாணயத் தவணை நிதியிடல் வசதி 2021 மீது வெளியிடப்பட்ட முன்மொழிவுக்கான கோரிக்கையுடன் தொடர்புடைய இணையத் தொடர்புகள் பின்வருமாறு நிதி அமைச்சின் இணையத்தளத்திலும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் காணப்படுகின்றன: