அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணுவதில் வேண்டப்பட்ட உரிய விழிப்புக்கவனச் செயன்முறைகள் இலங்கையில் தொழிற்படுகின்ற வங்கிகள் மூலம் (அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள்) பின்பற்றப்படவில்லை என ஒரு சில அதிகாரிகளினாலும் நபர்களினாலும் தெரிவிக்கப்பட்ட/ முன்வைக்கப்பட்ட கருத்துக்களை/ கரிசனைகளை இலங்கை மத்திய வங்கி திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.
கொவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்வதற்கான தேசிய முயற்சிக்கு உதவியினை நாடும் நோக்குடன் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 2020.04.08ஆம் திகதியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை வழங்குவதன் ஊடாக இலங்கை அரசாங்கமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஆலோசனையுடன் சிறப்பு வைப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது.