• Administrative Penalties imposed by the Financial Intelligence Unit (FIU) on Reporting Institutions from May to October 2024

    2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற் கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

  • IMF Reaches Staff-Level Agreement on the Third Review under Sri Lanka’s Extended Fund Facility Arrangement

    பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டதின் மூன்றாவது மீளாய்வினை நிறைவுசெய்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் எட்டியுள்ளனர். மீளாய்வானது பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவத்தினால் ஒப்புதலளிக்கப்பட்டு, பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையினால் நிறைவுசெய்யப்பட்டவுடன் நிதியிடலில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 333 மில்லியன் தொகைக்கான அணுகலினை இலங்கை கொண்டிருக்கும்.

  • SL Purchasing Managers’ Index (PMI) – October 2024

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 ஒத்தோபரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன

    தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 ஒத்தோபரில் 58.1 ஆக அதிகரித்து. தயாரிப்பு நடவடிக்கைகளில் மேலும் விரிவடைதலை எடுத்துக்காட்டியது. இம்மேம்பாடானது அனைத்துத் துணைச் சுட்டெண்களிலிருந்தும் கிடைத்த சாதகமான பங்களிப்புகளுடன் பருவ காலக் கேள்வியினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது.

  • Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the National Secretariat for Non-Governmental Organizations

    இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் இணைந்த குற்றங்கள்  மற்றும் அதனுடன் இணைந்த எவரேனும் ஆட்கள் பற்றி விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தல்கள் மீது தகவல்களைப் பரிமாற்றுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்துடன் 2024 நவெம்பர் 04 அன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் நிதியியல் உளவறிதல் பிரிவினால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

  • CCPI based headline inflation remained in the negative territory in October 2024

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுக்கு இசைவாக, தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் எதிர்மiறாயான புலத்தில் காணப்பட்டு, 2024 செத்தெம்பரின் 0.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில்  2024 ஒத்தோபரில் 0.8 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.

  • External Sector Performance - September 2024

    வெளிநாட்டுத் துறையானது 2023இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2024இன் இதுவரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமொன்றினைத் தொடர்ந்தும் பதிவுசெய்தது. வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 செத்தெம்பரில் (ஆண்டிற்காண்டு) விரிவடைந்து, 2024இன் இதுவரையான காலப்பகுதியில் உயர்ந்தளவிலான மாதாந்த வர்த்தகப் பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது.

  • SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – September 2024

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 48.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 செத்தெம்பரில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் வீழ்ச்சியொன்றினை எடுத்துக்காட்டுகின்றது. மாதகாலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் குறிப்பாக தேர்தல் தொடர்புபட்ட இடையூறுகள் காரணமாக சிறிதளவான மிதமடைதலை பல அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் அவதானித்தனர்.

  • An Explanatory Note on Central Bank of Sri Lanka's Open Market Operations (OMOs) and Money Printing

    இலங்கை மத்திய வங்கி அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக 2024 ஒத்தோபர் 25 அன்று ரூ.100 பில்லியன்களை “அச்சிட்டது” எனக் குறிப்பிட்டு அண்மையில் அறிக்கைகள் வெளிவந்தன. இவ்வறிக்கைகள் செம்மையற்றவை மற்றும் அடிப்படையற்றவை என்பதை தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும். திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக திரவத்தன்மையை (பணம்) உட்செலுத்துவது பொருளாதாரத்தில் குறுகிய கால வட்டி வீதங்களை நிலைநிறுத்தி விலை நிலையுறுதியை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக வங்கித்தொழில் முறைமையில் போதுமான திரவத்தன்மையை முகாமைசெய்வதை  நோக்காகக்கொண்ட வழமையான மத்திய வங்கித் தொழிற்பாடொன்றாகும். ஆகையினால் அது “நாணயம் அச்சிடல்” என ஒட்டுமொத்தமாக தவறாகப் பொருள்கொள்ளப்பட முடியாது.

  • 46th SAARCFINANCE Governors’ Group Meeting

    46ஆவது சார்க்பினான்ஸ் ஆளுநர்களின் குழுக் கூட்டத்தினை 2024 ஒத்தோபர் 24 அன்று வொஷிங்டன், டிசியில் இலங்கை மத்திய வங்கி தலைமை தாங்கி நடாத்தியது. பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுவின் வருடாந்த கூட்டங்களின் துணை நிகழ்வொன்றாக இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுநர்கள், நிதிச் செயலாளர்கள் மற்றும் சார்க் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் நிதி அமைச்சுக்கள் என்பவற்றிலிருந்தான ஏனைய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

  • Sri Lanka Purchasing Managers’ Index (Manufacturing and Services) - September 2024

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 செத்தெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

Pages