கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களை சீரமைக்கும் தேசிய முக்கியத்துவத்தினை இனங்கண்டு, 6 மாத காலப்பகுதியினைக் கொண்ட சலுகைக் காலம் உள்ளடங்கலாக 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதியொன்றுடன் கூடிய ஆண்டுக்கு 4 சதவீத வட்டிவீதத்தில் தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் திட்ட வசதியினை இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இலங்கை மத்திய வங்கி 3 கட்டங்களில் நடைமுறைப்படுத்தியது.
-
Central Bank Extends the Grace Period of 4% Working Capital Loan Scheme from 6 Months to 9 Months
-
The Central Bank publishes 'Recent Economic Developments: Highlights of 2020 and Prospects for 2021'
இலங்கை மத்திய வங்கி,“அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2020இன் முக்கிய பண்புகளும் 2021 இற்கான வாய்ப்புக்களும்”என்பதனை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசுரம் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் மூன்று மொழிகளிலும் தரவிறக்கப்படலாம்.*
பொருளாதார அபிவிருத்திகளின் கிரமமான இற்றைப்படுத்ததலுக்கு மேலதிகமாக, “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகளானது” 2020 ஒத்தோபர் நடுப்பகுதி வரையில் கிடைக்கத்தக்கதாகவுள்ள தகவல்களை கருத்திற்கொண்டு 2020 ஏப்பிறலில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நடுத்தர கால பேரண்டப்பொருளாதார எறிவுகளுக்கான இற்றைப்படுத்தலினையும் வெளிப்படுத்துகின்றது. கொவிட்-19 உலகளாவிய நோய்ப்பரவலினால் ஏற்பட்ட பன்மடங்கு சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் நிச்சயமற்றதன்மைக்கிடையில் பொருளாதாரமானது பயணிக்கின்ற முக்கியமானதொரு சந்தர்ப்பத்தில் இவ்வருடத்தின் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
Cancellation of the Licence issued to Axis Bank Limited (Axis Colombo Branch) based on the request made by the Axis Bank Limited, India
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை அக்சிஸ் பாங்க் லிமிடெட், இந்தியா, அதன் உலகளாவிய செயற்பாடுகள் குறித்து 2019இல் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தினைத் தொடர்ந்து மேற்கொண்ட கோரிக்கையைப் பரிசீலித்து பல நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு இலங்கையிலுள்ள அக்சிஸ் பாங்க் லிமிடெட்டின் வணிக நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்கும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட உரிமத்தினையும் இரத்துச் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியது.
நாணயச் சபையினால் விதிக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கமைவாக அக்சிஸ் பாங்க் லிமிடெட்டின் செயற்பாட்டின் மீது வங்கி மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளர் திருப்தியடைவதனால் அக்சிஸ் பாங்க் லிமிடெட்டிற்கு வங்கித்தொழில் வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் 2020 ஒத்தோபர் 30 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச் செய்யப்படுகின்றது.
-
CCPI based Inflation remained unchanged at 4 per cent in October 2020
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2019 ஒத்தோபரில் நிலவிய உயர் தளத்தின் புள்ளிவிபரத் தாக்கத்தின் காரணமாக 2020 ஒத்தோபரில் 4.0 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 11.5 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 0.9 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 1.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 செத்தெம்பரின் 4.7 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 4.6 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.
-
Special Arrangements made by Employees’ Provident Fund Department of the Central Bank of Sri Lanka to Provide Uninterrupted EPF Related Services to its Stakeholders
இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாபத் திணைக்களமானது, கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக நாட்டில் நிலவிவருகின்ற கஷ்டமான நிலைமைக்கு மத்தியிலும் அதன் பணிகளை இடைத்தடங்கலின்றி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பில் அதன் அனைத்து ஆர்வலர்களுக்கும் அறிவிக்கின்றது. மீளளிப்பு நிதியங்களைத் தீர்ப்பனவு செய்தல், பங்களிப்புச் சேகரித்தல், நிலுவை உறுதிப்படுத்தல்களை மற்றும் பங்களிப்பு வரலாற்று அறிக்கைகளை வழங்குதல் அத்துடன் பெயர் மற்றும் கணக்குத் திருத்தங்கள் போன்றன தொடர்புபட்ட பணிகள் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Cancellation of the Licence issued to ICICI Bank Limited (ICICI Colombo Branch)
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட் இந்தியாவின், கோரிக்கையைப் பரிசீலித்து பல நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு இலங்கையிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட்டின் வணிக நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்கும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியது.
-
The Central Bank of Sri Lanka Continues its Accommodative Monetary Policy Stance
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 ஒத்தோபர் 21ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கும் இதன்மூலம் தற்போதுள்ள அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்வதற்கும் தீர்மானித்துள்ளது. இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் மத்திய வங்கியினால் முன்னொருபொழுதுமில்லாத வகையில் எடுக்கப்பட்ட நாணய தளர்த்தல்களினைத் தொடர்ந்து, சபையானது ஒட்டுமொத்த சந்தை கடன் வழங்கல் வீதங்களில் வீழ்ச்சியினை அவதானித்திருந்ததுடன் சந்தை கடன் வழங்கல் வீதங்களில் பரந்தளவிலான கீழ்நோக்கிய திருத்தத்தின் தொடர்ச்சியினையும் எதிர்பார்க்கின்றது. இதன்மூலம், தற்போது காணப்படுகின்ற தாழ்ந்தளவிலான பணவீக்க சூழலில் பொருளாதாரத்தில் திறன்மிக்க துறைகளுக்கு வசதியான கொடுகடன் பாய்ச்சல்களினையும் உறுதிசெய்கின்றது.
-
NCPI based Inflation increased in September 2020
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஓகத்தில் 6.2 சதவீதத்திலிருந்து செத்தெம்பரில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் மாதாந்த அதிகரிப்பின் மூலம் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2019 செத்தெம்பரில் நிலவிய உயர்வான தளத்தின் புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக 2020 ஓகத்தில் 13.2 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில்; 12.7 சதவீதத்திற்குக் குறைவடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 ஓகத்தில் 1.1 சதவீதத்திலிருந்து செத்தெம்பரில் 1.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
Central Bank Approved 61,907 Loans Amounting to Rs. 178 billion through Saubagya COVID-19 Renaissance Facility
இலங்கை மத்திய வங்கியானது 2020 ஒத்தோபர் 15ஆம் திகதி வரையில் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற 61,907 கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதலளித்தது. இந்த விண்ணப்பங்கள் மொத்தமாக ரூ.177,954 மில்லியனை வகைகூறுவதுடன் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் மூன்று கட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது வரையில், உரிமம்பெற்ற வங்கிகள் நாடுமுழுவதும் பாதிக்கப்பட்ட 45,582 வியாபாரங்களுக்கிடையில் ரூ.133,192 மில்லியன் கடன்களை விடுவித்துள்ளது. (தகவல்களுக்கு அட்டவணை 01 இனைப் பார்க்கவும்)
-
Sri Lanka Purchasing Managers’ Index - September 2020
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் செத்தெம்பரில் விரிவடைந்தன.
தயாரிப்பு நடவடிக்கைகள், 2020 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பரில் உயர்வான வீதமொன்றில் விரிவடைந்தன. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் இவ்விரிவடைதலுக்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் விசேடமாக உணவு மற்றும் குடிபானம், புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறைகளின் தயாரிப்பில் அதிகரிப்புக்கள் பிரதான காரணமாக அமைந்தது.
பணிகள் துறையானது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பரில் 54.3 கொ.மு.சு பதிவுடன் தொடர்ச்சியாக நான்காவது மாதமாகவும் தொடர்ந்தும் விரிவடைந்தது. பணிகள் துறை நடவடிக்கைகள் மேலும் மீட்சியடைவதனை எடுத்துக்காட்டி 2020 ஓகத்துடன் ஒப்பிடுகையில் புதிய வியாபாரங்கள்இ வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட விரிவடைதல்கள் மூலம் இது துணையளிக்கப்பட்டிருந்தது.