• Sri Lanka Purchasing Managers’ Index - May 2021

    தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் மேயில் சுருக்கமடைந்தன.

    கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையின் பாதகமான தாக்கங்களின் காரணமாக தயாரிப்பு நடவடிக்கைகள் மே காலப்பகுதியில் சுருக்கமடைந்தன.

    கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையின் அதிகரிப்பிற்கு இசைவாக பணிகள் கொ.மு.சுட்டெண் 2020 ஏப்பிறலிலிருந்து ஆகக்குறைந்த வாசிப்பினைப் பதிவுசெய்து 2021 மேயில் 39.5 இற்கு மேலும் வீழ்ச்சியடைந்து.

  • Concessionary Scheme for Businesses and Individuals Affected by the third Wave of COVID-19

    கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் (இதனகத்துப்பின்னர் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் எனக் குறிப்பீடுசெய்யப்படும்) கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளைப் பற்றிய 2021ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களைக் கோரியுள்ளது:

  • Provision of Banking Services Amidst the COVID-19 Outbreak

    இலங்கை மத்திய வங்கி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபரின் அனுமதியைப் பெற்ற பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடித்து கொவிட் -19 நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பயணக் கட்டுப்பாடுகளுக்கமைவாக  அத்தியாவசிய வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) ஏற்கனவே வேண்டிக்கொண்டுள்ளது.

    கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் வங்கித்தொழில் பணிகளை வழங்குவது குறித்து உரிமம்பெற்ற வங்கிகளால் வெளியிடப்பட்ட தகவல் தொடர்புகளை/ அறிவிப்புக்களைக் கவனித்து இலங்கை மத்திய வங்கி பின்வருவனவற்றை தெளிவுபடுத்த விரும்புகின்றது.

  • Measures to Encourage Offshore Borrowings by Private Sector

    நாட்டிற்கு வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியானது கௌரவ நிதி அமைச்சரின் சம்மதத்துடனும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் தனியார் துறையின் வலிமைகள் மீது உந்துசக்தியளிக்கின்ற கரைகடந்த நிதியளித்தலை திரட்டுவதற்கான வழிகளைப் பின்பற்றுமாறு தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கின்றது.

    இது தொடர்பில், கரைகடந்த கடன்பாடுகள் பற்றிய வெளிநாட்டுச் செலாவணி இடர்நேர்வுக்கு காப்பளிப்பதற்கு வருடாந்தம் மீளாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படக்கூடிய சொல்லப்பட்ட கடன்பாடுகளின் காலப்பகுதிக்காக தனியார் துறையினரின் வெளிநாட்டுச் செலாவணி கடன்பெறுநர்களுக்காக செலவில்லாத பரஸ்பரப் பரிமாற்றல் ஒப்பந்த வசதியொன்று இலங்கை மத்திய வங்கி மூலம் கிடைக்கப்பெறச் செய்யப்படும்.

  • Concessionary Scheme for Businesses and Individuals Affected by the Third Wave of COVID-19

    கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) கோரியுள்ளது:

  • CCPI based Inflation increased to 4.5 per cent in May 2021

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 ஏப்பிறலின் 3.9 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலின் 9.0 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 9.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலின் 1.8 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மேயில் 3.9 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

  • NCPI based Inflation increased in April 2021

     தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2021 மாச்சின் 5.1 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2020 ஏப்பிறலில் நிலவிய குறைவான தளப் புள்ளிவிபரத் தாக்கம் முக்கிய காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மாச்சின் 8.8 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 9.7 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மாச்சின் 2.0 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஏப்பிறலில் 5.3 சதவீதத்தில் மாற்றமின்றி காணப்பட்டது.

  • Arrangements to Provide Services of Employees’ Provident Fund Department of the Central Bank of Sri Lanka Remotely/ Regionally due to Travel Restrictions in the Country

    நாட்டினுள் அமுலாக்கப்பட்டுள்ள பயணத்தடைகளின் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு சமூகமளிக்காது ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தினால் வழங்கப்படும் பணிகளை தபாலில், மின்னஞ்சலில், இணையத்தில் அல்லது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிக் கிளையொன்றின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

  • The Central Bank of Sri Lanka Continues its Accommodative Monetary Policy Stance to Support the Sustained Recovery of the Economy

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2021 மே 19 ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனையில் கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. தற்போது நிலவும் தாழ்ந்த பணவீக்கச் சூழல் மற்றும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் மற்றும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையினால் எழுந்துள்ள புதிய சவால்கள் என்பனவற்றின் பின்னணியில் நீடித்து நிலைத்திருக்கும் பொருளாதார மீட்சியொன்றிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு சபையானது தற்போதுள்ள தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைப் பேணுவதற்குத் தொடர்ந்தும் கடப்பாடு கொண்டுள்ளது.

  • Imposition of Penalties to Enforce Compliance on Financial Institutions during the First Quarter of 2021 by the Financial Intelligence Unit (FIU)

    2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டமானது நிதியியல் நிறுவனத்தின் அல்லது பெயர்குறிக்கப்பட்ட நிதியல்லாத் தொழிலின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமை என்பவற்றைப் பரிசீலனையில்கொண்டு குறித்துரைக்கப்படக்கூடியதாகும்.

    அதற்கமைய, நாட்டில் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தலுக்கான ஒழுங்குமுறைப்படுத்துநராக நிதியியல் உளவறிதல் பிரிவானது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு நிதியியல் நிறுவனங்கள் மீது 2021 சனவரி 01 தொடக்கம் மாச்சு 31 வரையான காலப்பகுதிக்காக மொத்தமாக ரூ.4.0 மில்லியன் தொகையுடைய தண்டங்களை விதித்துள்ளது.

Pages