• SL Purchasing Managers’ Index Survey - September 2016

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் செத்தெம்பரில் 57.7 ஆக அமைந்ததுடன் இது, 2016 ஓகத்தின் 53.5 இலிருந்து 4.2 சதவீதம் கொண்டதொரு அதிகரிப்பாகும். செத்தெம்பரில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு புதிய கடட்ளைகள் மற்றும் உற்பத்தித் துணைத் துறைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட முன்னேற்றஙக் ள் தூண்டுதலாக அமைந்தன. தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தித் துணைச் சுட்டெண்கள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்த வேளையில் கொள்வனவு இருப்புச் சுட்டெண் மாற்றமின்றிக் காணப்பட்டது. எனினும், தொழில்நிலை மற்றும் நிரமப்லர் வழங்கல் நேர துணைச் சுட்டெண்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தன. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து, நடுநிலையில் காணப்பட்ட நிரமப்லர் வழங்கல் நேர சுட்டெண்கள் தவிர்ந்த அனைத்து துணைச் சுட்டெண்களும் 50.0 அடிமட்டத்திற்கு மேலே காணப்பட்டன.

  • Statement issued by the Monetary Board

    நாணயச் சபை, 2016 ஒத்தோபர் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதன் கூட்டத்தில் 2016 மாச்சு 31இல் முடிவடைந்த ஆண்டுப் பகுதியிலும் அதேபோன்று 2016 ஓகத்து 31இல் முடிவடைந்த ஐந்து மாத காலப்பகுதியிலும் முதனிலை வணிகர்களின் நிதியியல் செயலாற்றம்  உள்ளிட்ட தொழிற்பாடு மீதான இடைக்கால அறிக்கையினைப் பரிசீலனையில் எடுத்துக் கொண்டது. முதனிலை வணிகர்களின் செயலாற்றத்திலும் அதேபோன்று வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகளின் தன்மையுடன் தொடர்பான குறிப்பிட்ட விடயங்களிலும் கரிசனைக்குரிய பெருமளவு ஒவ்வாத தன்மைகள் கவனிக்கப்பட்டுள்ளன. இது, தொடர்பில் தலத்திலான பரீட்சிப்பு அறிக்கைகள் தொடர்பாக தற்பொழுது இடம்பெற்றுவரும் தயாரிப்புச் செயன்முறையினை விரைவாக நிறைவு செய்யுமாறு நாணயச் சபை அறிவுறுத்தியிருக்கிறது. இது, எதிர்கால நடவடிக்கைகளின் மீது நாணயச் சபை நேரகாலத்துடன் தீர்மானமொன்றினை மேற்கொள்வதனை இயலச்செய்யும். 

  • External Sector Performance - July 2016

    வர்த்தகப் பற்றாக்குறை குறைவடைந்தமை, அதிகரித்த சுற்றுலா வருவாய்கள், நிதியியல் கணக்கிற்கான உயர்நத் உட்பாய்ச்சல்கள் என்பனவற்றின் காரணமாக 2016 யூலையில் வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் மேம்பட்டது. வர்த்தகப் பற்றாக்குறை யூலையில் சுருக்கமடைந்தமைக்கு இறக்குமதிகளில் ஏற்பட்ட குறைப்பு காரணமாக விளங்கியதுடன், இது ஏற்றுமதிகளில் ஏற்பட்ட குறைப்பினை விஞ்சிகக் hணப்பட்டது. சுற்றுலா வருவாய்கள் அதிகரித்த வேளையில், இம்மாதகாலப்பகுதியில் தொழிலாளர் பணவலுப்பல்கள் முன்னைய ஆண்டின் தொடர்ச்சியான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தன.

  • Central Bank Resolves Four Insolvent Financial Institutions to Protect Depositors and Promote the Financial System Stability

    2016.10.10 அன்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, நாணயச் சபை 2016.10.14 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், நிதியியல் முறைமையில் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையினை பாதுகாக்கும் நோக்குடன் தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் பின்னணியில் பல வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் தொடர்பில் பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வருவது பற்றி பரிசீலனைக்கு எடுத்தது. இதற்கமைய, நாணயச் சபை, மூன்று நிதிக் கம்பனிகளின் வைப்பாளர்களுக்கும் என்றஸ்ட் செக்குறிட்டீஸ் பிஎல்சி இல் உள்ள அரச பிணையங்களுடன் இணைக்கப்பட்ட முதலீடுகளிலுள்ள சட்ட ரீதியான முதலீட்டாளர்களுக்கும் மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் விதத்தில் பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டுவரும் பொறிமுறையொன்றிற்கு ஒப்புதலளித்தது.

  • Inflation in September 2016

    தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஓகத்தில் 4.5 சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 4.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்துள்ளன. 

    ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 ஓகத்தில் 3.6 சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

  • Land Price Index - First Half of 2017

    உண்மைச் சொத்துத் துறையின் அபிவிருத்திகளை கண்காணிக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியானது பல குறிகாட்டிகளை தொகுத்து பகுப்பாய்வு செய்கின்றது. 1998 முதல் கொழும்பு மாவட்டத்தினை உள்ளடக்கி தொகுக்கப்படுகின்ற அரையாண்டு காணி விலைச் சுட்டெண் இத்தன்மையிலான குறிகாட்டிகளிலொன்றாகும். காணி விலைச் சுட்டெண் தொகுக்கும் செயன்முறையில், இலங்கை மத்திய வங்கியானது கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளின் 1 சுமார் 50 நிலையங்களை உள்ளடக்கி இலங்கை விலை மதிப்புத் திணைக்களத்தினால் சேகரிக்கப்படும் காணி விலைத் தரவுகளைப் பயன்படுத்துகின்றது. காணிப் பல்வகைப் பயன்பாட்டுத்தன்மை நோக்கிலும் ஒரேசீர்மை அமைப்பினைப் பேணுவதற்கும் வதிவிட, வர்த்தக ரீதியான மற்றும் கைத்தொழில் காணிகளுக்காக மூன்று சுட்டெண்கள் வெவ்வேறாகக் கணிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று துணைச் சுட்டெண்களினதும் சராசரியினைக் கருத்திற்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த காணி விலைச் சுட்டெண் கணிக்கப்படுகின்றது.

  • Financial Intelligence Unit of Sri Lanka Entered into a Memorandum of Understanding with Department of Inland Revenue

    2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பரிமாறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 ஒத்தோபர் 19ஆம் நாளன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி.

  • Monetary Policy Review - No. 7 of 2017

    Considering developments in the domestic and international macroeconomic environment, the Monetary Board, at its meeting held on 06 November 2017, was of the view that the current monetary policy stance is appropriate. Accordingly, the policy interest rates of the Central Bank of Sri Lanka will remain unchanged at their current levels.

    The decision of the Monetary Board is consistent with the objective of maintaining inflation at midsingle digit levels over the medium term and thereby facilitating a sustainable growth trajectory. The rationale underpinning the monetary policy stance is set out below.

  • Clarification on Employment Numbers Referred to in the Central Bank Annual Reports

    2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில் நிலை எண்ணிக்கைகளை மேற்கோள் காட்டி வெளிவருகின்ற  ஊடக அறிக்கைகள் மீது இலங்கை மத்திய வங்கி அவதானம் செலுத்தியுள்ளது.  

  • SL Purchasing Managers’ Index Survey - October 2016

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 செத்தெம்பரில் 57.7 உடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் 56.5 ஆகக் காணப்பட்டது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியானது 2016 ஒத்தோபரில் தயாரிப்பு நடவடிக்கைகள் மிதமான வேகத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டுகின்றது. செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்களின் செயலாற்றத்தில் காணப்பட்ட மிதமான வேகமே முக்கிய காரணமாகும். கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண் ஒத்தோபரில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து எதிர்வரும்; காலத்திற்காக இருப்புக்கள் குவிக்கப்பட்டமையினை எடுத்துக் காட்டிய வேளையில் நிரம்பலர் வழங்கல் நேரம் சிறிதளவில் அதிகரித்தது. தொழில்நிலைத் துணைச் சுட்டெண்ணும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியைக் காட்டியது.

Pages