சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத்துறைக்கான கடன் விகிதங்களை குறைத்து கடன் பாய்ச்சலை அதிகரிப்பதற்கான வழிவகைகள்

நிதித் துறை மூலம் நாணயக் கொள்கையை துரிதப்படுத்தவும், பொதுவாக கடன் சாதனங்களின் மற்றும் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வட்டி வீதத்தை உரிமம்பெற்ற வங்கிகள் குறைப்பதற்கும் அதனூடாக உண்மைப் பொருளாதாரத்திற்கான கடன் பாய்ச்சலை அதிகரிக்கவும் இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களை வைப்புக்களுக்கான வட்டி வீதங்களை 29.04.2019 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் குறைப்பதற்கு கோரியுள்ளது. அதன்படி உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 3 மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியைக் கொண்ட சேமிப்பு வைப்புக்கள் மற்றும் ஏனைய வைப்புக்களுக்கான வட்டி வீதம் துணைநில் வைப்பு வசதி வீதத்துடனும் நீண்ட காலப்பகுதிக்குரியவை 364 நாள் திறைசேரி உண்டியல் வீதத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. 

நியதி ஒதுக்கு தேவைப்பாடுகளைக் குறைப்பதனூடாக மத்திய வங்கி உள்நாட்டுச் சந்தைக்கு அதிகளவு ரூபாய்த் திரவத்தன்மையை செலுத்தியுள்ளது, மற்றும் கொள்கை வட்டி வீதங்களை 2019 மே 31இல் 50 அடிப்படைப் புள்ளிகளால் மேலும் குறைத்ததுடன், இது துணைநில் வைப்பு வசதி வீதத்தின் குறைப்பினைப் பிரதிபலித்ததுடன் சேமிப்பு வைப்புக்களின் வட்டி வீதக் குறைப்பிற்கும் வழிவகுத்தது.

2019 யூலை 01 முதல் மத்திய வங்கி, வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் 2019ஆம் ஆண்டின் 3வது காலாண்டுக்குரிய வைப்புக்களுக்கான குறிப்பு வீதங்களைத் திருத்தியதுடன் மேலும் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக்களின் அதிகபட்ச வட்டி வீதங்கள் முறையே 50 அடிப்படைப் புள்ளிகள் மற்றும் 171 அடிப்படைப் புள்ளிகளால் மேலும் குறைக்கப்பட்டது. அதன்மூலம் வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் நிதிச் செலவு குறைவடையும். உரிமம்பெற்ற வணிக வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வீதம் 2019 ஏப்பிறல் 26இல் உள்ளவாறான 12.24 சதவீதத்திலிருந்து 2019 யூலை 12இல் உள்ளவாறான 10.97 சதவீதத்திற்கு 127 அடிப்படைப் புள்ளிகளால் குறைவடைந்துள்ளது. 

அதன்படி, வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் கடன் வட்டி வீதங்கள் உடனடி எதிர்காலத்தில் மேலும் குறைவடையுமென மத்திய வங்கி எதிர்பார்ப்பதுடன்,கடன் பெறுனர் குறிப்பாக,சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களிலிருற்து குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறது. மத்திய வங்கி, வங்கிளின் வட்டி வீதங்களின் நடத்தையை உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன் எதிர்காலத்தில் பொருத்தமான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதனூடாக நன்கு கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்க அழுத்தங்களால் கொடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும்.

Published Date: 

Thursday, July 18, 2019