திரு. கே. ஜி. பி. சிறிகுமார
துணை ஆளுநர்
திரு. சிறிகுமார, 25 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை மத்திய வங்கியில் வேறுபட்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார். துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், உதவி ஆளுநர் பதவியினை வகித்ததுடன், காலத்திற்கு காலம், இவர் நாணய முகாமைத்துவம், பொதுப் படுகடன் முகாமைத்துவம், வைப்புக் காப்புறுதி, நிதியியல் துறை தீர்மானம், நிதி மற்றும் நிறுவனப் பணிகள் உள்ளடங்கலாக பல தொழிற்பாடுகளையும் மேற்பார்வை செய்தார். 
திரு. சிறிகுமார, வங்கித்தொழில் மற்றும் நிதியியல் துறை, நிதியியல் சந்தை உட்கட்டமைப்பு வசதிகள், மூலதனச் சந்தைகள் மற்றும் பணம் தூயதாக்குதலை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை முறியடித்தல் ஆகியவற்றில் பல எண்ணிக்கையான சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் முக்கிய ஏதுவாக அமைந்திருந்தார். இவர், வங்கிக்குள் கண்டிப்பான ஆளுகை நியமங்களை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் நிதியியல் துறையை வலுப்படுத்துவதற்கான தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார். தேசிய கொடுப்பனவுச் சபை, நிதியியல் உறுதிப்பாட்டுக் குழு, நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவக் குழு, நிதியல்லா இடர்நேர்வு முகாமைத்துவக் குழு என்பவற்றிலும் 2006ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க கொடுப்பனவு உபாயங்களின் மோசடிகள் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழாத்திலும் இவர் உறுப்பினராகவிருந்தார். நாணயச் சபை ஆலோசனைக் கணக்காய்வுக் குழு மற்றும் சபை இடர்நேர்வு மேற்பார்வைக் பணியாற்றியுள்ளார். குழு ஆகியவற்றில் இவர் அவதானிப்பாளரொருவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் இலங்கை வங்கியாளர்களின் நிறுவகத்தின் துணைத் தலைவராக தொழிற்படுகின்றார்.
திரு. சிறிகுமார, அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்திலுலிருந்தும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்தும் சட்ட முதுமானிப் பட்டங்களை பெற்றவராவார். இவர், சட்ட இளமானிப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவராவார். இவர், ஒரு சட்டத்தரணியும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச இணங்குவித்தல் அமைப்பின் உறுப்பினருமாவார். பணம் தூயதாக்குதலுக்கு எதிரான மற்றும் இணங்குவித்தலில் சர்வதேச டிப்ளோமாக்களைப் பெற்றவராவார்.
            







