வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 மே

வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2021 மேயில் விரிவடைந்தது. 2020 மேயிலும் பார்க்க ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் 2021 மேயில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக் காணப்பட்டமைக்கு முக்கியமாக ஓராண்டிற்கு முன்னைய உலகளாவிய நோய்த்தொற்றின் புள்ளிவிபர அடிப்படைத் தாக்கங்களுடன் தொடர்புடைய இடையூறுகளே காரணமாக அமைந்தன. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2021 மேயில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்திருந்த வேளையில், இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்தன. இம்மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ந்தும் அதிகரித்திருந்த வேளையில், சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் குறைந்த மட்டங்களிலேயே காணப்பட்டன. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையிலுள்ள வெளிநாட்டு முதலீடுகள் 2021 மேயில் சிறிதளவான தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தன. அதேவேளை, இலங்கை ரூபா இம்மாதம் முழுவதும் பரந்தளவில் நிலையாகக் காணப்பட்டதுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2021 மே மாத இறுதிக்காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 4.0 பில்லியனாக விளங்கியது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, July 14, 2021